எங்களைப்பற்றி

ஆரோக்கியசுவை ஆசிரியர் குழு 

கெளரவ தலைவர்; சித்தமருத்துவர் டாக்டர் பாஸ்கரன்

பொறுப்பாசிரியர் ; பா.கனீஸ்வரி 

மூத்த உதவி ஆசிரியர்; பசுமை சுந்தர்

 

ஆரோக்கிய சுவையை பற்றி..

இயற்கையோடு இணைந்ததாகவே மனிதனின் வாழ்க்கை முறை, உணவு முறை என்றைக்குமே இருந்து வருகிறது. அதில் இருந்து வழுவும் போதுதான் நோய் தொற்றுகள், கொரோனா போன்ற போன்ற நுண்ணுயிரிகள்  நம்மை தாக்குகின்றன. முன் எப்போதும் இல்லாத வகையில் வேளாண்மை துறை, உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை குறித்த விழிப்புணர்வு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அதிகரித்து வருகிறது. படித்து பட்டம் பெற்ற, மாதம் தோறும் லட்சகணக்கான சம்பளம் வாங்கும் பலர் தங்கள் வேலையை துறைந்து விட்டு இயற்கை வேளாண்மையை முன்னெடுக்கும் பணிக்குத் திரும்பியிருக்கின்றனர். 

நாடு முழுவதும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால் தமிழ்நாட்டின் பல நகரங்களில் இயற்கை உணவு விற்பனை அதிகரித்திருக்கிறது. இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கும் பழக்கமும் மக்களிடம் அதிகரித்திருக்கிறது. இந்த சூழலில்தான் இயற்கை வேளாண்மை , ஆரோக்கியமான உணவு முறை ஆரோக்கியமான வாழ்வியல் ஆகிய ஒன்றுக்கு ஒன்று தொடர்புடைய மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்டு ஆரோக்கியசுவை என்ற இணையதளத்தை நாங்கள் தொடங்கினோம். இப்போதுவரை இந்த நோக்கத்தின் அடிப்படையில் தொடர்ந்து இயங்கி வருகின்றோம். இனியும் இந்தப் பணி தொடரும்.