ஆரோக்கியம் தரும் சிகப்பரிசியை சமைத்து உண்ணுங்கள் | சிவப்பு அரிசி பயன்கள்


சிகப்பரிசி அல்லது மட்டை அரிசி எனப்படும் அரிசி நிறைய சத்துகள் நிறைந்தது. நாம் இப்போது சாப்பிடும் வெள்ளை வெளேர் அரியை விடவும் சிவப்பரிசியில் நார்சத்து அதிகம் உள்ளது. இதயக்கோளாறு, கொழுப்பு சத்து நிறைய இருப்பவர்கள் சிகப்பரிசியை அடிக்கடி சமைத்து உண்ணலாம்.

சிவப்பரிசியில் உமி நீக்கப்படாததால், வேக வைப்பதற்கு நேரம் ஆகும். எனினும் சிகப்பரிசியை 2 மணி நேரத்துக்கும் மேல் ஊற வைத்து, பின்னர் சமைக்க வேண்டும். சமைக்கும் போது அரிசி நசியும் அளவுக்கு இருக்க வேண்டும். அப்போதுதான் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும். முதலில் சிகப்பரிசியை சாப்பிடுவதற்கு என்னவோ போலத்தான் இருக்கும் நாளடைவில் பழகி விட்டால் இதை விட முடியாது. நிறைய சத்து நிறைந்தது. இதனால் செரிமானம் எளிதில் நடப்பதோடு ,சாப்பிடுவதும் எளிமையாக இருக்கும்

சிகப்பரிசியில் வெண் பொங்கல் செய்தும் சாப்பிடலாம். சுவையாக இருக்கும். சிகப்பரிசியை வெள்ளை அரிசியைப் போல பழையது வைத்து சாப்பிட முடியாது. எனவே சாப்பிடும் அளவுக்கு மட்டும் சமைத்து அவ்வப்போது சாப்பிட்டு விடவும்.

சிகப்பரிசி புட்டு, கொழுக்கட்டை ஆகியவற்றையும் செய்து சாப்பிடலாம். இவ்வளவு சத்துகள் மிகுந்த சிகப்பரிசி எங்கு கிடைக்கும்.

அறல் இயற்கை வேளாண் பண்ணையில் தற்பொழுது பூங்கார் மற்றும் குள்ளக்கார் அரிசி கிடைக்கிறது. தேவைபடுவோர் பதிவு செய்து வாங்கிக்கொள்ளலாம்! -வ.சதிஸ்.,B.E (Civil),அறல் இயற்கை வழி பண்ணையம்,கோட்டப்பூண்டி,செஞ்சி மொபைல்; 8940462759

 

 


Comments


View More

Leave a Comments