கொரோனா காலத்து தொப்பையை குறைக்க இயற்கையான வழிமுறைகள்…
கட்டுரையின் சிறப்பம்சங்கள்
வீட்டிலேயே முடங்கியிருந்ததால் தொப்பை
தொப்பையை குறைக்க வாழைதண்டு ஜூஸ்
வாழைதண்டு ஜூஸ் குடித்தால் சீறுநீரகத்தில் கல் உருவாகாது
கொரோனா பெருந்தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக பொது ஊரடங்கு காலகட்டத்தில் வீட்டிலேயே முடங்கியிருந்த பலருக்கு தொப்பை போட்டிருக்கிறது. ஆண்கள், பெண்கள் வித்தியாமில்லாமல் தொப்பையால் அவதிப்பட்டு வருகின்றனர்.
கொரோனா காலகட்டத்துக்கு முன்பு பூங்காக்களில் நடைபயிற்சி மேற்கொண்டவர்கள், பூங்காக்கள் மூடப்பட்டதால், நடைபயிற்சி மேற்கொள்ள முடியாமல் போய்விட்டது. யோகா, ஜிம் போன்ற பயிற்சிகளில் ஈடுபடுபவர்கள், அதற்கான வாய்ப்புகள் இல்லாமல் முடங்கி இருந்தனர்.
இப்போது பூங்காங்கள் திறக்கப்பட்டிருப்பதால், காலை வேளைகளில் தொப்பையுடன் பலர் நடைபயிற்சி மேற்கொள்வதை காணமுடிகிறது. இந்த தருணத்தில் வாழைதண்டு ஜூஸ் குடித்தால் தொப்பை குறைகிறது என்ற நல்ல செய்தியும் வந்திருக்கிறது.
வாழைத்தண்டு ஜூஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
வாழைத்தண்டை எடுத்து நறுக்கி ஒரு கப்பில் எடுத்துக் கொள்ளுங்கள், எலுமிச்சை பழத்தில் இருந்து ஒரு டீ ஸ்பூன் என்ற அழவில் சாறு எடுத்துக் கொள்ளுங்கள், ஒரு கப் தண்ணீரை தயாராக வைத்துக் கொள்ளுங்கள், உப்பு தேவையான அளவு மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்.
தேனில் கலப்படத்தை கண்டறிவது எப்படி
தோல் நோய்களுக்கு நறுவிலி,புற்றுநோய்க்கு புங்கம்!
ஒரு கப் தண்ணீரில் நறுக்கி வைத்திருக்கும் வாழைத்தண்டுகளைப் போட வேண்டும். பின்னர் இதனை ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
ஒருமணி ஏரம் கழித்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டியால் சாறை மட்டும் பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் வாழைத்தண்டின் சாறுடன், ஏற்கனவே பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாறு கலந்து தேவையான அளவு உப்பும் சேர்த்து குடிக்க வேண்டும்.
தயாரித்த உடனே வாழைத்தண்டு ஜூஸை குடிக்க வேண்டும். வாழைத்தண்டு ஜூஸ் குடிப்பதால் இன்னொரு பயனும் ஏற்படுகிறது. சீறுநீரக கற்கள் ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது.
பா.கனீஸ்வரி
#BananaStemJuice #HealthyBananaStem
கூகுள் செய்தியில் ஆரோக்கிய சுவை உணவு இணையதளத்தை பின்தொடர இங்கே கிளிக் செய்யவும்
Comments