
சிறுதானியத்தில் சிறப்பானது கம்பு | கம்பு தரும் மருத்துவ பயன்கள்
கொரோனா தொற்று பரவலுக்குப் பின்னர் உலக மக்கள் சமுதாயமே இயற்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கிறது. பலர் இயற்கை உணவுகளுக்குத் திரும்பி இருக்கின்றனர். நமது பாரம்பர்ய சமையலில் கம்பு சிறுதானியம் மிக முக்கிய இடத்தை வகிக்கிறது. கம்பு அனைத்துப் பகுதிகளிலும் எளிதாக கிடைக்கக் கூடியது.
கம்பில் புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் உயிர்ச்சத்துக்களும் உள்ளன. இது ஜீரண சக்தியை அதிகரிக்கும். உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும்.
வேண்டாத கொழுப்புகளை கரைத்து பருமனைக் குறைக்கும். இது தாய் மார்களுக்கு பால் உற்பத்தியைப் பெருக்கும். உடல் வலிமையை அதிகமாக்கும்.
கம்பு கால்சியம், இரும்பு, புரதம், மாவுச் சத்து நிறைந்தது. வயிற்றுப் புண் மற்றும் குடல் புண்ணை ஆற்றும் குணம் கொண்டது.
மன அழுத்தத்தைப் போக்கிப் புத்துணர்வு ஏற்படுத்தும் சக்தி கம்புக்கு இருப்பதாக அண்மைக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கண்பார்வை மற்றும் பாலியல் குறைபாடுகளுக்கும் இதில் மருந்து பொதிந்திருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறு தானியங்களிலே அதிக புரதச் சத்து நிறைந்தது கம்பு.
எனவே உடலுக்கு ஆரோக்கியமான சிறுதானியமான கம்பு சமைத்து உண்டு உடல் நலத்தைப் பேணுங்கள்.
Comments