
அட்சய திருதியைல ஆரம்பிச்ச அட்சய பாத்திரம் நிறைவாக தொடர்கிறது
ஒரு வருசமாச்சுப்பா சாப்பாடு கொடுக்க ஆரம்பிச்சு..அட்சய திருதியைல ஆரம்பிச்ச அட்சய பாத்திரம் நிறைவாகவே...
பசிக்கு டீச்சர்...சொன்ன குழந்தையோட வார்த்தை தான் இதோ இப்ப வரை ஓட வைச்சிருக்கு...
சோறு கொடுக்கலாம்கற முடிவெடுத்த நாள் அது 23.42020 ல ஆரம்ப கால கட்டம்லாம் ரெம்ப கஷ்டம்.. இப்படிலாம் sponsors இருப்பாங்கனுலாம் நினைக்கல.எம் பிள்ளைக பசிக்குங்குதுக சோறு போடணும்னு முடிவெடுத்தேன். கூட வந்தாரு கணவர்...
மதுரைல இருந்து ஜெயலட்சுமி அம்மா,அப்றம் அண்ணன்Priyan Mariya Mariya Priyan ,அப்றம் இரயில் கரங்கள் னு உதவினாங்க...அந்த ஆரம்ப கட்ட தருணங்கள் உதவி பேரன்பாக எனக்கு..4 மாசம் கணவர் தான் ஊட மாட காசு கொடுத்தாரு.கொரனோ காலம்னால கடையும் பூட்டிட இருக்கறத வைச்சு அனுசரிச்சோம்.
வீடு, சமூகப் பணி இரண்டையும் பேலன்ஸ் பண்ண வீட்ல பிள்ளைக உதவினாங்க...வண்டில போறப்ப ஒரு சனம் தெருல இருக்காது.வேகமா ஓட்டவும் தெரியாது.மெதுவா போவேன்.நெறய பயம்.. நிறைய விமர்சனங்கள் னு போச்சு. எல்லாத்துலயும் கணவர், பிள்ளைக கூட இருந்தாங்க…
ஒரு பொம்பள புள்ளய சமூகம் கொண்டாடுதுன்னா அந்த spaceவீடு தரணும்ல... அத தந்த்து கணவர் தான். ஏன் பா..உன் பொண்டாட்டிக்கு இதெல்லாம் தேவையா...னு கேட்ட ஒருத்தருக்கு நல்லது தானே செய்றா செய்யட்டுமேனு பதில் கொடுத்த கணவர் வரம் தானே.....பையன் வண்டில விழுந்து ஆக்சிடென்ட் ஆனசமயம்... அம்மாவா கலங்கி நிக்கேன். சாப்பாட கொடுத்துட்டு ஆஸ்பத்திரிக்கு வா ..ன்னு ்தைரியம் கொடுத்த கணவர் வரமாகவே..
எப்ப பாரு சோறு போடறேன்னு போட்டோ போடறேனு சொன்னவங்கள ..சிரிச்சு கடக்கறேன். ஒவ்வொருத்தரும் அனுப்பற காசு அவங்க வேர்வை.அவங்க உழைப்பு.எம் மேல வைச்சிருக்கற நம்பிக்கை. இந்தா இன்னக்கி. கொடுத்தேன்பான்னு அவங்களுக்கு சொல்லணும்ல... இதோ பதிவு போடறப்பல்லாம் பின்னாடி நிக்கற நீங்க... பண்ணுமா...பண்ணுனு கரம் கொடுக்கற நட்புகள்..
5 pm family, ஊடக நட்புகள், முகமே தெரியா உறவுகள்னு சொல்ல சொல்ல நீளுது பட்டியல்... நாடுகள்,மதங்கள்,இனங்கள்,்மொழிகள். தாண்டி உதவும் மனித நேயம் இதெல்லாமே நான். முக நூலில். சம்பாதிச்சத அன்பு தான்...தம்பி செந்தில் இயற்கை உணவகம் நன்றி மா..
தம்பிகள், அண்ணன்கள்,அப்பா, அம்மா, நட்புகள் என எல்லோருக்கும் நன்றி மா...பேரன்போடு கரம் குவிக்கிறேன்.
இரயில் கரங்களின் அண்ணாRajamanickam Ravikumar பேரன் ஆதிராபிறந்த நாள் ஏப்ரல் 7..
இதோ இன்றைய நாளில் வெஜிடபிள் பிரியாணியும், கேசரியும் கொடுத்தாச்சுப்பா..Happy birthday ஆதிரா செல்லம்...
மன நிறைவான நாளாக இன்றும்...