கம்பத்தில் பசியோடு இருப்போருக்கு அன்னமிடும் கைகள்…
இந்த சமூகத்தில் யாரும் அற்றவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிறுநகரங்களில் கூட இப்போது யாருமற்றவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது எதிர்காலம் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. யாரும் இல்லாமல் தனிமையில் ரோட்டோரத்தில் பலர் வசிக்கின்றனர். அத்தகையவர்களை தேடி சென்று உணவு வழங்கும்பணியில் ஈடுபட்டுள்ளார் கம்பத்தை சேர்ந்த பெண்மணி விஜயலட்சுமி என்பவர். அவரது முகநூல் பதிவில் இருந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்களை இங்கே பகிர்ந்திருக்கின்றோம்.
Also Read: கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்
இன்றைய நாள் பசி இல்லா கம்பம் சார்பாக சாலையோர மக்களுக்கு மற்றும் நேற்று உணவு கேட்டும் தீர்ந்து விட்ட காரணத்தால் சில நபர்களுக்கு உணவு கொடுக்க இயலவில்லை. ஆனால் இன்று அந்த நபர்களை தேடி கண்டுபிடித்து விட்டேன். அவர்களுக்கும் இன்று உணவு வழங்கப்பட்டது.
இன்றைய உணவு முட்டை கிரேவி. இன்று உணவு வழங்குபவர் பசியில்லா கம்பத்தில் நிறுவனர் வேற யாரும் இல்லைங்க நானேதான் எனது சார்பாக வழங்கினேன் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்... பசியில்லா கம்பம் என்றவுடன் இது ஒரு பெரிய அமைப்பு அறக்கட்டளை என்று யாரும் நினைச்சிடாதீங்க. நான் செய்கின்ற சேவைக்கு ஒரு பெயரை வைத்துக் கொள்ளலாம் என்று ஒரு சிறிய ஆசையில்தான் எனது ஊர் கம்பம் என்பதால் ஊரை இணைத்துக்கொண்டு பசியில்லா கம்பம் என்று நான் பெயர் வைத்துக்கொண்டேன்
Also Read: தமிழ்நாட்டில் நடைபெற உள்ள வேளாண் நிகழ்வுகள், பயிற்சிகள், கண்காட்சிகள் குறித்த தகவல்கள்
என்னால் இயன்றவரை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் எத்தனையோ மக்களுக்கு அவர்களின் தேவைகளையும் பசியையும் போக்குவேன் என்ற ஒரு கொள்கையோடு எனது பயணம் தொடர்கின்றது .இவை என்றென்றும் தொடர உங்கள் எல்லோரின் ஆசியும் ஆதரவும் எனக்கு என்றுமே வேண்டும்.
நீங்களும் உங்கள் வீட்டு நிகழ்வுகளில்...இது போன்ற நபர்களுக்கு உதவி செய்ய விரும்பினால்..என்னை தொடர்பு கொள்ளலாம்.8778294020 என்ற எனது மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். என் சுந்தரா travels il எனது பயணம் ஒவ்வொரு நாளும். ஏன் என்றால்..சாலையோர மக்களை தேடி தேடி..கண்டுபிடிக்கும் சூழ்நிலை அல்லவா..அதனால் என் கணவர் எனக்கு இருசக்கர வாகனத்தை பயன்படுத்துமாறு சொன்னார்..அதனால் அதில் என் பயணங்கள் தொடர்கின்றது.
நன்றி; விஜயலட்சுமி முகநூல் பதிவு
#PoorFeed #FoodForAll #FoodForNeedy #FreeFood #FreeFoodInCumbum
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்