இயல் உணவு குழுவின் இனிய நேசம்... ஆதரவற்றோர்களுக்கு உணவு அளிக்கும் இதயங்கள்!


ஓசூரில் உள்ள இயல் உணவு முகநூல் குழு நண்பர்கள் ஓசூரில் உள்ள ஆதரவற்றோர்களுக்கு உணவு அளித்து வருகின்றனர். வாரந்தோறும் உணவு அளித்து வந்த இவர்கள், இப்போது கொரோனா காரணமாக தினமும் உணவு அளித்து வருகின்றனர். தவிர ஆதரவற்றோர்களை மீட்டு அவர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து மனம் தளராமல் உதவும் இந்த இதயங்கள் துடிப்பதற்கு தடையற்ற ஆதரவுகள் தேவை. அவர்களின் வேண்டுகோளை இங்கு பதிவு செய்கின்றோம். முடிந்த அளவுக்கு அனைவரும் உதவுங்கள்.

மனதார கேட்கிறேன்... நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
உயிரின் சுபாவம் ஆனந்தம்.

இயல்உணவு குழு ஆதரவற்று சாலைகளில் சுற்றிகொண்டிருக்கும் மனநலம் குன்றிய, பாதிப்புடைய ஆண், பெண் இருபாலருக்கும் உணவு, மற்றும் உடை, அடிப்படை மருத்துவம் ஆகியவற்றை ஒவ்வொரு வார இறுதி நாட்களில் செய்து வருகிறோம். கடந்த வாரம் தோழர்கள் உதவி மிகவும் பயனுள்ளதாக இருந்தது... மகிழ்ச்சி... இந்த வாரம் தண்ணீர் பாட்டில்கள், மற்றும் போற்வைகள் வாங்க தங்கள் மனதிடம் கரங்களை நீட்டுகிறோம். வாங்கி உடனிருந்தும் வழங்கலாம், வாங்க நிதி உதவியும் வழங்கலாம்... உங்கள் பயன்படுத்திய உடைகள், காலனிகள், போற்வைகள் குடுத்தும் உதவலாம் அன்பு நண்பர்களே...

Postal address. Anu Muralidharan. Indian coffee bar, no. 21/1, Rajaji Nagar, rayakottai road, opp sub-treasury office, near shraddha school, Hosur-635109, Krishnagiri dt., 9840123515. @ (Google Pay no.)

Account detail.
Anu Muralidharan.
ac no. 0213104000171823. Hosur branch ifsc code IBKL 0000213.idbi bank.

முடிந்தவரை உதவிடுங்கள் பதிவை நண்பர்களுடன் பகிர்ந்திடுங்கள்...

இயல் உணவு
தானத்தில் சிறந்த அன்னதானம்.
ஓசூர்.