ஸ்விக்கி ஊழியர்களின் தொடர்போராட்டம், உணவு விநியோகம் தடைபட்டது…


 

சென்னையில் உள்ள ஸ்விக்கி தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை முதல் திருத்தப்பட்ட ஊதியக் கட்டமைப்பை எதிர்த்து போராட்டம் நடத்தி வருவதால், சென்னையில் ஸ்விக்கி சேவைகள் கிடைக்கவில்லை. 

சென்னையின் சில பகுதிகளில் ஸ்விக்கி மற்றும் இன்ஸ்டாமார்ட் சேவைகள் முடங்கியுள்ளன.  பெரும்பாலான உணவகங்களில் இருந்து டெலிவரி கிடைக்கவில்லை என்று பல பயனர்கள் ட்வீட் செய்தனர்.

Must Read: தாய்வழி இயற்கை உணவகத்தின் வெற்றிக்கதை


ஸ்விக்கியின்  இன்ஸ்டாமார்ட் பிரிவில், "எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சிக்கல்களால் கடை மூடப்பட்டுள்ளது" என்று செயலியில் மன்னிப்பு கோரியுள்ளது. இந்த நிலையில் சென்னை ஆட்சியரிடம் ஸ்விக்கி ஊழியர்கள் மனு அளித்துள்ளனர். முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் அருகே பெரும் திரளான ஸ்விக்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஸ்விக்கி தரப்பில் வேலை நிறுத்தத்தை  முடிவுக்கு கொண்டு வர எந்த ஒரு முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிகிறது. இதனால், வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். தொழிலாளர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 


Comments


View More

Leave a Comments