அறிவியல்முறை இயற்கை வேளாண்மை இரண்டு நாள் பயிற்சி


நான் கலந்து கொள்ளும் பல்வேறு கூட்டங்களில் அறிவியல் அடிப்படையிலான இயற்கைவழி வேளாண்மை குறித்த பயிற்சிகள் தேவை என பல்வேறு இளைஞர்கள், உழவர்கள்  கேட்டுக் கொண்டே இருந்தார்கள். 

மண் அறிவியல் என்ன, மண்ணில் உள்ள சத்துக்கள் யாவை? அவை எப்படி பயிருடன் செயலாற்றுகின்றன? கார்பன், நைட்ரசன் ஆகியவற்றின் பணி என்ன? pH மதிப்பு, மின்கடத்து திறன், உப்பின் அளவு (EC. TDS) ஆகியவற்றைக் கண்டறியும் முறை, நொதிப்புச் சாறுகளில் உள்ள அறிவியல் போன்ற ஆழமான இயற்கை வேளாண்மை நுட்பங்களைக் கற்றுக் கொள்ளவும் இரண்டு நாள் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Must Read: ரயில் பயணத்தில் வாட்ஸ் ஆப் மூலம் உணவு ஆர்டர் செய்யலாம்..

கூட்டுப் பண்ணையம் என்றால் என்ன? திணைவாழ்வூர் (Eco-Village) என்றால் என்ன? எப்படி அதை உருவாக்குவது? அதற்கான நிதி திரட்டும் முறை என்ன? போன்ற புதிய வகுப்புகளும் உண்டு. 

பொதிகையில் இரண்டு நாட்கள் பயிற்சி

 

தமிழர்களின் திணை வாழ்வியல் முறைகள், குறிஞ்சி, முல்லை, மருத நிலங்களை அறிவியல் முறையில் கண்டறிவது எப்படி?  பண்ணை வடிவமைப்பு நுட்பங்கள்  போன்ற விளக்கங்களும் உண்டு.பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நுட்பங்களைத் தனிப்பிரித்து, திரிகடுகம், ஆசாரக்கோவை முதலிய இடுபொருள்களைத் தயாரிப்பது பற்றியும் தெரிந்து கொள்ளலாம். 

இத்துடன் பல்வேறு இயற்கைவழி வேளாண்மை குறிந்த ஆலோசனைகள், வழிகாட்டுதல்களை பாமயன், முனைவர். நடராசன், ஆரோவில் ராஜகணேஷ் ஆகியோரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.இவை தவிர, பொதிகைமலையின், தென்காசித் தென்றலையும், குற்றாலச் சாரலையும் அனுபவிக்கலாம், மூலிகை மண்ணின் நீரில் குளிக்கலாம், இப்படிப் பலவும் உண்டு.

இரண்டு நாள் உங்களுடன் நாங்கள் இருப்போம், கலந்துரையாடுவோம். நாள்: அக்டோபர் 15, 16 (புரட்டாசி 28,29) முன்பதிவு செய்ய வேண்டுகிறேன். தொடர்பு எண்: 9787854557

-பாமயன்

படங்கள்; பொதிகையில் நடைபெற்ற முந்தைய பயிற்சிகளின் கோப்புகாட்சிகள்

#OrganicFarmingTraining , #OrganicFarming,  #FarmingTraining 

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்  டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்


Comments


View More

Leave a Comments