
மஞ்சள், மிளகாயில் இருக்கும் மகத்துவங்களை தெரிந்து கொள்ளுங்கள்
மஞ்சள், மிளகாய் போன்ற உணவுப் பொருட்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நம் உணவில் இடம் பெற்று வருகின்றன. இயற்கை நமக்கு அளிக்கும் கொடையான இந்த பொருட்கள் உடல்நலனுக்கு ஏற்றவைதான் என்று பல்வேறு ஆராய்ச்சிகளும் நிரூபித்துள்ளன.
அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹில்லாரி தேர்தல் பிரசாரத்தின்போது தமது உடல் சோர்வு ஏற்படாமல் இருக்க தினமும் ஒரு மிளகாய் சாப்பிடுவார் என்று சொல்லப்படுகிறது.
2019-ம் ஆண்டு இத்தாலியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், வாரத்துக்கு நான்குமுறை மிளகாய் சாப்பிடுபவர்களுக்கு மரணம் அடைவதற்கான வாய்ப்புகள் தள்ளிப்போகின்றன என்று தெரியவந்துள்ளது. 2015-ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆய்வில் மிளகாய் சாப்பிடும் ஐந்து லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்விலும் இதே கருத்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தினந்தோறும் மிளகாய், மஞ்சள் போன்ற இயற்கை பொருட்களை உண்பவர்கள் ஆரோக்கியத்தை பேணமுடியும் என்றும் நீண்டகாலம் வாழ முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது குறித்து கூறும் ஹார்வர்ட் ஸ்கூல் ஆஃப் ப ப்ளிக் ஹெல்த் நுண்ணூட்டசத்து துறை பேராசிரியர் லு க்யூ, தினந்நோதும் அதிக அளவு மிளகாய், மஞ்சள் போன்ற இயற்கை பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்வோருக்கு கேன்சர், ஹார்ட் அட்டாக் , சுவாச நோய்கள் ஏற்படும் அபாயம் குறைகிறது. இதனால் இயல்பாகவே இந்த நோய்களால் ஏற்படும் இறப்பு விகிதமும் குறைகிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது என்று கூறுகிறார்.
Comments