குழந்தையின்மைக்கு ஒட்டுமொத்த உடலும் வலுப்பெற மருந்துகள் தேவை..
நல்ல உடல் ஆரோக்கியம் உள்ள மனிதர்களை இப்போது அதிகம் பார்க்கமுடியவில்லை. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் இதயம் சார்ந்த நோய்கள், சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இவை எல்லாவற்றையும்விட மனிதனின் அடிமடியில் கைவைத்துவிட்டார்களோ என்று சொல்லுமளவுக்கு குழந்தையின்மை பிரச்சினை விஸ்வரூபமாக உருவெடுத்திருக்கிறது. ஆண்களில் பலர் தாம்பத்தியத்தில் திருப்தியாக ஈடுபட முடியாமல் தவிக்கிறார்கள்.
Must Read: இலங்கை தமிழர்கள்; போரின் வலியும் புதிய வாழ்வும்
சமீபகாலமாக குழந்தையின்மை மற்றும் ஆண்மைக்குறை, தாம்பத்தியத்தில் முழுமையாக ஈடுபட முடியவில்லை என சொல்லிக்கொண்டு அதற்காக மருந்துகள் கேட்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், இன்ஸ்டன்ட் மருந்தை நாடுபவர்களே அதிகம். அதுபோன்ற மருந்துகளை நாம் எப்போதும் பரிந்துரைப்பதில்லை. தாது விருத்தி என்று சொல்வார்கள். அதாவது ஒட்டுமொத்த உடல்பலமும் கிடைக்கும்விதத்தில் மருந்துகள் சாப்பிடுவதே சிறந்தது.
அதற்கு உணவே மருந்து மருந்தே உணவு என்பதே சிறந்தது. ஆம்... உணவே மருந்து மருந்தே உணவு என்ற அடிப்படையில் சில மருந்துகளைச் சாப்பிடுவது நல்லது. புளிச்சக்கீரை, செவ்வாழைப்பழம் போன்றவை நல்லது. பொதுவாக அமுக்கரா சூரணம் நல்ல பலன் தருகிறது.
அதேபோல பூனைக்காலி விதையும்கூட பலன் தரும். அமுக்கரா சூரணத்துடன் பூனைக்காலி விதை பொடியையும் சேர்த்து பாலில் கலந்து சாப்பிடலாம். பூனைக்காலி விதையை மருந்தாக சாப்பிடாமல் ஸ்நாக்ஸ் உருண்டையாக எடுத்துக்கொள்ளலாம்.
எப்படியென்றால் முதலில் 50 கிராம் பூனைக்காலி விதையை வறுக்க வேண்டும். அதன்பிறகு பொரிகடலை (பொட்டுக்கடலை) கால் கிலோ, ஒரு ஸ்பூன் கேழ்வரகை தனித்தனியாக நெய் விட்டு வறுத்து சூடு ஆறியதும் எல்லாவற்றையும் பொடியாக்கிக் கொள்ள வேண்டும். இதனுடன் வெல்லம், தேங்காய்த்துருவல் சேர்த்து உருண்டையாக்கி சாப்பிடலாம். வேர்க்கடலை, பாதாம், பிஸ்தா பருப்புகளும் சேர்த்துக் கொள்ளலாம். இதை ஒரு ஸ்நாக்ஸ் மாதிரி சாப்பிடலாம். இன்னும் சிலர் லேகியம் ஏதாவது இருந்தால் கொடுங்கள் என்று கேட்கிறார்கள். நம்பிக்கையான தகுதிவாய்ந்த மருத்துவர்களை பரிந்துரைக்கிறேன்.
Must Read: இன்றைய இயற்கை வேளாண் சந்தை
முன்பெல்லாம் கற்றாழை வளர்ப்பார்கள்; ஆனால், அதன் பயன் தெரியாமல்தான் பலர் இருக்கிறார்கள். குமரி என்று இன்னொரு பெயரைக்கொண்டுள்ள கற்றாழை பெண்களின் பல நோய்களை தீர்க்கக்கூடியது என்பது பலருக்கு தெரியவில்லை.
காற்றை சுத்திகரிக்கும் ஒரு ஆலை போன்று செயல்படக்கூடியது கற்றாழை. வைட்டமின்கள், என்சைம்கள் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்த கற்றாழை தோல் மற்றும் முடிக்கு நிறைய நன்மைகளைத் தரக்கூடியது. அதேவேளையில் கற்றாழை குளிர்ச்சியூட்டக்கூடியது என்பதால் மழை மற்றும் குளிர்காலங்களில் பயன்படுத்தும்போது கவனம் தேவை. இப்படி ஒவ்வொரு தாவரத்துக்கும் ஒவ்வொருவிதமான பலன்கள் இருக்கின்றன இதைத் தெரிந்து கொண்டு.எல்லோரும் நலம் பெறட்டும்.
- எம்.மரிய பெல்சின் - 9551486617
#infertility #infertilityissue #fertilitycare
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments