கொரோனா எதிர்ப்பு சக்தியளிக்கும் இந்த உணவுகளை சாப்பிடுங்கள்


கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பு மருந்துகள் ஏதும் இல்லை. இந்த நிலையில் இந்த கொடூர வைரஸ் பரவுவதில் இருந்து  நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள எதிர்ப்பு சக்தி மிக்க உணவு வகைகளை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

என்னென்ன பழங்கள் சாப்பிடலாம்

கொரோனா எதிர்ப்பு சக்தி மிக்க உணவுப் பொருட்கள் என்று தேடி அலைந்து அதிக பணம் செலவழித்து வாங்க வேண்டியதில்லை. எளிதாக கிடைக்கும் பொருட்களே கொரோனா எதிர்ப்பு சக்தி உள்ளவைதான். குறிப்பாக எலுமிச்சை, ஆரஞ்சு,மாம்பழம், நெல்லிக்காய், திராட்சை அல்லது உலர் திராட்சை , ப ப்பாளி, கொய்யா, மாதுளை, முக்கியமாக பூச்சி மருந்து கலப்பு இல்லாத பழங்களை உண்பது மிகவும் நல்லது.

கொரோனா எதிர்ப்பு கொண்ட காய்கறிகள் 

காய்கறிகளைப் பொறுத்தவரை தக்காளி, வெங்காயம், பூசணி, முருங்கை, மிளகாய், காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், பச்சைப்பட்டாணி போன்றவற்றை சமைத்து உண்ணலாம்.இந்திய காய்கறிகளில் இயற்கையிலேயே வைரஸ் தடுப்பு, பாக்டீரியா தடுப்பு, போன்ற தடுப்பு சக்திகள் உள்ளன என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதையும் படியுங்கள்;நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஐந்து முக்கியமான காய்கறி, பழங்கள்...

வெங்காயம், தக்காளி, பூண்டு இந்த மூன்று பொருட்களுடன் நெய்அல்லது தேங்காய் எண்ணைய் மஞ்சள், மிளகு ஆகியவை சேர்த்து செய்யப்பட்ட உணவுகள் மிகவும் சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இவை எல்லாவற்றையும் விட மிகவும் எதிர்ப்பு சக்தி வாய்ந்தது நெல்லிக்காய்தான். இதர காய்கறி, பழங்களுடன் ஒப்பிடும்போது நெல்லிக்காயில் வைட்டமின் சி 500 மடங்கு உள்ளது. அதே போல பீட்ரூட்டும் அதிக சக்தி கொண்ட காய்கறி என்று சொல்கின்றனர். இரும்பு, பொட்டாசியம், ஃபோலிக் ஆசிட் ஆகியவை நிறைந்தது பீட்ரூட்.

-பா.கனீஸ்வரி

#covid19  #coronavirus  #immunityfoods  #immunityfurits #immunityboostingfoods

 

 


Comments


View More

Leave a Comments