
யாவரும் அறிந்து கொள்ள வேண்டிய திணை வாழ்வியல் கூடல்
அதிகார வெறி, வெறுப்பு நெறி, போர் வேட்கை, காடு/ கடல்/மலை/ஆறு/குளங்கள் அழிப்பு, உணவு நஞ்சாதல், நீர்/நிலம்/காற்று மாசுபாடு, தண்ணீர்த் தட்டுப்பாடு, வைரஸ் தாக்குதல், என்று இன்று உலகம் சந்திக்கும் கடும் நெருக்கடிகளுக்குத் தீர்வு என்னவாக இருக்கும் என்று நம்மில் பலரும் சிந்திப்பது உண்டு. அதற்கான விடை தேடலே இந்த நிகழ்வு.
உயிர்ம நேயம், கூட்டு முயற்சி, இயற்கையோடு இயைவு, தற்சார்பு உணவு, எளிய வாழ்வு என்று மாற்றுகளை நோக்கிய பார்வையே இந்த நிகழ்வு. அதுவே தொல்காப்பியம் முதல் சங்க இலக்கியம் வழி நாம் கண்ட திணையியல்.
Must Read: எண்ணெய் தடவல், எண்ணெய் குளியலால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?
திணையியல் என்பது தொல்காப்பியர் கண்டறிந்த மாபெரும் கோட்பாடு. தமிழர்கள் உலக மக்களுக்குக் கொடுத்த கொடை. இதை இளைஞர் முதல் யாவரும் அறிந்து கொள்ள வேண்டிய கருத்து.
இன்றைய உலகம் சந்திக்கும் சூழலியல் சீர்கேடுகளுக்கும், இயற்கைக்கு எதிரான வாழ்க்கைப் போக்குக்கும் தீர்வாக அமைவது திணை வாழ்வியல் நெறிமுறைகளாகும். இக்கருத்துகள் செம்மையாகச் சிந்திக்கும் இளைஞர் கூட்டத்திடம் கொண்டு சேர்க்ப்பட வேண்டும் என்ற ஆவலினால் திணை கருத்துக் கூடல் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
திணை என்ற அறிவியல் கோட்பாட்டுக் கூறுகளை சங்க இலக்கிய வாழ்வு, இன்றைய பொருத்தப்பாடு குறித்து உரைகள் மூலம் புரிந்து கொள்வது, மனிதனை மையப் பார்வையில் இருந்து இயற்கை மையத்தை நோக்கிச் சிந்திப்பது.
திணை வாழ்வு, உயிர்ம நேயத்தை முன்னிறுத்தும் தொல்காப்பியம், சங்க இலக்கியம், இக்கால இலக்கியம், பற்பல சமயச் சாரங்கள், மார்க்சியம் முதலிய சிந்தனையியல்களின் உரைகள், கவிதை வாசிப்பு, இசைப் பொழிவு, படங்கள் திரையிடல், ஓவியம் தீட்டல் என்று அறிவுக்கு விருந்தாகும் நிகழ்வாக இது அமையும்.
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் அருகில் உள்ள தணையணை அருவிச் சாலையில் அமைந்துள்ள பொதிகைச் சோலை என்ற கூட்டுப் பண்ணைப் பயிற்சிக் கூடத்தில் வைத்து நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணி தொடங்கி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிவரை நடைபெறும்.தமிழ் மைந்தர் மன்றம் நிகழ்வை ஒருங்கிணைக்கிறது. நிகழ்வு குறித்து மெய்யிறை நாதன் - 9663243520, நடவரசன் - 9942056664, செம்பரிதி - 9489879902 ஆகியோரை அவர்களின் மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
Must Read:உடம்புக்கு என்ன தேவை என்பதை கவனித்துக் கேளுங்கள்….
முப்பது பேர்கள் மட்டுமே பங்கெடுக்க முடியும் என்பதால் முன்பதிவு அவசியம். பங்கேற்புக் கட்டணம் :ரூ.1500/- வசூலிக்கப்படும்.
கட்டணம் செலுத்தவேண்டிய வங்கிக் கணக்கு விவரம்;
Name: N SURESH KUMAR
A/c No : 50100006747410
IFSC: HDFC0001049
Branch: ANEKAL - 562106
பொதிகை சோலை வருவதற்கான வழி உதவிக்குறிப்புகள்:
சென்னை, மதுரையில் இருந்து வருவோர் பேருந்து மூலம் வரவேண்டுமானால் தென்காசி, செங்கோட்டை வழிச் செல்லும் பேருந்தில் ஏறி வாசுதேவநல்லுர், தரணி சர்க்கரை ஆலை நிறுத்தத்தில் இறங்க வேண்டும். தொடர்பாளர் எண்ணில் அழைத்தால் உங்களை நிகழ்விடத்திற்கு அழைத்துவர ஏற்பாடு செய்யப்படும்.
தொடர்வண்டியில் வருவோர் சங்கரன்கோயில் அல்லது ராசபாளையம் நிலையத்தில் இறங்கி பேருந்து மூலம் தரணி சர்க்கரையாலை நிறுத்தம் வந்து அழைக்க வேண்டும். தனி வாகனத்தில் வருவோர் நேரடியாக பொதிகைச்சோலை என்று இணையத்தில் பதிவிட்டு வழி பெறலாம், அல்லது தொடர்பாளரை அழைக்கலாம். https://www.google.com/.../data=!4m6!3m5…
படம், செய்தி; திரு.பாமயன் அவர்களின் முகநூல் பதிவு
#Thinailifestylemeet #ilifestylemeet #organicagriculture
TRENDING; மூட்டுவலிக்கு முடவாட்டுக்கால்கிழங்கு, ஜொமாட்டோ அடாவடி, தேன்சாப்பிடும் முறை
Comments