சிறுநீரக பிரச்னைக்கு சித்தமருத்துவம் தந்த அற்புத தீர்வு


ஐசியுவில் இருந்த 80வயதுமுதியவரை ஆங்கில மருத்துவர்கள் கைவிட்ட நிலையில்  சித்தமருத்துவத்தின் விளைவாக  நலம் பெற்றிருக்கிறார். பாரம்பர்ய மருத்துவத்தின் வெற்றிக்கு மற்றும் ஒரு சாட்சியாக இந்த சம்பவம் திகழ்கிறது.. 

கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த லோகநாதன் என்ற விவசாயி. அவருக்கு இப்போது 80 வயது ஆகிறது. சிறுநீரக கோளாறு காரணமாக கோயம்புத்தூரில் உள்ள புகழ்பெற்ற பெரிய மருத்துவமனைக்கு அவர்களின் குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். 

எட்டு இடங்களில் சர்ஜரி 

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட லோகநாதனுக்கு ஒன்பது நாட்கள் சிகிச்சையளிக்கப்பட்டது.  உடல் முழுக்க  உப்பு நீர் பரவியிருந்ததால் இடது காலில்  எட்டு இடங்களில் ஓப்பன் சர்ஜரி செய்யப்பட்டது. எனினும்  பலன் அளிக்காமல் அவரது உடல் உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கின. 

இதையும் படியுங்கள்: கலவைக் கீரை செய்யறது ரொம்ப ஈஸி….

மூலிகை இலை சாறு, கசாயம் 

மருத்துவமனையில் வைத்து தினமும் செலவழிக்க முடியாத நிலையில் கடந்த மார்ச் மாதம் 30ம் தேதி முதல் வீட்டில் இருந்தபடியே அவரது மகன் கணேஷ் ராம் சித்தமருத்துவர்கள் மற்றும் நாட்டுமருத்துவர்களின் மேலான ஆலோசனையின்படி சிகிச்சை அளித்து வந்தார். 

நித்யகல்யாணி பூ புற்றுநோய் செல்களை தடுக்கும் திறன் கொண்டது

மூலிகை இலைச்சாறு மற்றும் கசாயம் ஆகியவற்றை சித்தமருத்துவர்களின் ஆலோசனைப்படி தொடர்ந்து கொடுத்து வந்தார். ஆங்கில மருத்துவ முறையில் குணப்படுத்த முடியாத சிறுநீரக் கோளாறு இன்றைக்கு சித்தமருத்துவ முறையில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது என்று லோகநாதனின் மகன் கணேஷ் பெருமையுடன் கூறுகிறார். 

மருத்துவர்களின் ஆச்சர்யம் 

இது குறித்து பெரியநெசலூர் கணேஷ்ராமிடம் பேசினோம். “என் தந்தை இன்று தனியாக எழுந்து நடமாடக்கூடிய நிலையில் உள்ளார். இதை கோவை மருத்துவமனை மருத்துவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று என் தந்தையை மீண்டும் அங்கு அழைத்துச் சென்றேன். சென்ற ஆண்டு சிகிச்சைக்கு முன்பு எடுத்த மருத்துவ சோதனைகளை திரும்பவும் எடுத்தனர். 

இதையும் படியுங்கள்: சத்துமிக்க இயற்கை அவல் எங்கே கிடைக்கும் தெரியுமா?

19.07.2021 அன்று என் தந்தைக்கு எடுக்கப்பட்ட ஆய்வகச் சோதனையின் அறிக்கையில் என் தந்தையின் உடல் உறுப்புகளில் வழக்கமான செயல்பாடுகள் இருந்ததை கண்டனர். மருத்துவர்களுக்கு இது பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.  ஏதோ ஒரு சக்தி உங்கள் தந்தையை காப்பாற்றி இருக்கிறது என்று ஆங்கில மருத்துவர்கள் கூறினர். நான் அவர்களிடம் நமது பாரம்பர்ய மருத்துவம்தான் காப்பாற்றியது என்று சொன்னேன். எனவே நமது பாரம்பர்ய சித்தமருத்துவ முறையில் நம் நோய்களை குணப்படுத்த முடியும் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

 மூக்கிரட்டை வேர் 

சித்தமருத்துவர்களின் ஆலோசனைப்படி வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு நித்திய கல்யாணி பூ கசாயமும், அளவுகடந்த உப்புநீரை குறைப்பதற்கு மூக்கிரட்டை வேர், துத்தி வேர், சிறுகண்பீளை வேர், நாயுருவி வேர், தவசி முருங்கை வேர், இவற்றுடன் சுக்கு, கருஞ்சீரகம் சேர்த்து கசாயமும் புரோஸ்டேட் வீக்கத்தை குறைக்க நெருஞ்சி முள், சிறுகண்பீளை சமூலத்துடன் சீரகம் சேர்த்து கசாயம் தயாரித்து சித்தமருத்துவர்கள் கூறிய படி கொடுத்து வந்தேன். இதனால்தான் இன்றைக்கு என் தந்தை குணம் அடைந்துள்ளார். 

மூக்கிரட்டை வேர் பிரேஸ்டேட் வீக்கத்தை குறைக்க உதவும்

இந்த தருணத்தில் என் தந்தை லோகநாதன் நோயிலிருந்து மீண்டுவர இரவு பகல் பாராமல் தக்க நேரத்தில் ஆலோசனை வழங்கி உதவிபுறிந்த அனைத்து சித்த மருத்துவர்கள் மற்றும் நாட்டு மருத்துவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்,” என்று கூறினார். 

நித்தியகல்யாணியின் மகிமைகள் 

கணேஷ்ராம் தனது தந்தைக்கு கொடுத்த நித்தியகல்யாணி பூவின் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.  நித்திய கல்யாணி பூவை கசாயம் ஆக்கி குடிக்கும்போது புற்றுநோய் காரணமாக கீமோதெரபி,ரேடியேசன் தெரபி எடுத்துக் கொள்ளும் நோயாளிகளுக்கு பலன் தரும். 

நித்தியகல்யாணி பூ, இலை, வேர் ஆகியற்றை கொண்டு கசாயம் தயாரித்து குடிக்கும்போது சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். சர்க்கரை நோயினால் பிற உடல் உறுப்புகள் பாதிக்காமல் பாதுகாத்துக் கொள்ள முடியும். 

உரிய ஆலோசனைக்குப் பின்னர் செயல்படவும் 

நித்யகல்யாணியை கொண்டு கசாயம் தயாரிப்பது குறித்து சித்தமருத்துவர்களிடமோ அல்லது பாரம்பரியமான நாட்டுவைத்தியர்களிடமோ தகுந்த ஆலோசனை பெற்று அதன் அடிப்படையில் சிகிச்சை எடுக்கொள்ளவும். இல்லையெனில் எதிர் விளைவுகள் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு. எனவே எச்சரிக்கையுடன் செயல்படவும்.  


சாத்தியம்தான்

இது குறித்து அரசு சித்த மருத்துவர் திரு.விக்ரம் குமாரிடம் கருத்துக் கேட்டோம். சித்தமருத்துவத்தால் முதியவர் லோகநாதன் குணம் அடைந்த தற்கு மகிழ்ச்சி தெரிவித்ததுடன், "கண்டிப்பாக சித்தமருத்துவத்தில் இது சாத்தியம்தான். சித்தமருத்துவர்களின் அறிவுரைப்படி உரிய முறையில் மருந்துகளைக் கொடுத்தால், மருந்துகள் வேலை செய்யும். நோயாளி குணம் பெறுவதற்கு சாத்தியம் உண்டு,” என்றார். 

பா.கனீஸ்வரி 

#SiddhaMaruthuvam  #SiddhaMedicine  #Siddha #KidneyDisease #KidneyDiseaseCure

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

Comments


  • பெரியநெசலூர் கணேஷ்ராம்

    ஆங்கில மருத்துவத்திற்கும் சித்த மருத்துவத்திற்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்துகொள்ள பேருதவியாக அமைந்தது இந்த பதிவு. மிக்க நன்றி. அன்புடன் கணேஷ் பெரியநெசலூர்

    Jul, 28, 2021
View More

Leave a Comments