இட்லி மிருதுவாகவும் சுவையாக இருக்க வேண்டுமா? வெளியன் சம்பா அரிசியில் செய்து பாருங்கள்!


உலகின் ஆரோக்கியமான உணவு வகைகளில் முதன்மையானது இட்லி, ஆவியில் வேக வைக்கப்பட்டு, சுட,சுட மிருதுவான இட்லியை, தேங்காய், பொட்டுக்கடலை சட்னியோ அல்லது சாம்பாரிலோ அல்லது மட்டன், சிக்கன், மீன் குழம்பு என ஏதாவது ஒன்றில் தொட்டு சாப்பிட்டால் அதன் சுவை அலாதி ஆனந்தம். இட்லிக்கு ஈடு இணை வேறு இல்லை. 

காலை நேரத்தை எனர்ஜியோடு தொடங்குவதற்கும், இரவு நேரம் அல்லது ஒரு மழைகால, பனிக்கால இரவு நேரத்தின் சுவையை கூட்டவோ இட்லி மிகச்சிறந்த காம்பினேஷன் ஆக இருக்கும். இப்படியான சிறப்பு மிக்க தமிழர்களின் பிரதான காலை உணவு இட்லி. முன் காலத்தில் சிற்றுண்டிக்கும் சம்பா ரக பாரம்பரிய அரிசிகளையே பயன் படுத்தி வந்தோம். காலப்போக்கில் புதிய ஒட்டுரக குண்டு அரிசிகளை பயன்படுத்த துவங்கினோம். இட்லி என்றாலே மல்லிகைபூ போல மிருதுவாகவும், வெண்மையாகவும் இருக்க வேண்டும் என்கிற மனநிலைக்கு தள்ளப்பட்டோம்.

Must Read: நியாய விலைக் கடைகளில் சிறுதானியங்கள்..இயற்கை ஆர்வலர்கள், ஊடகங்களின் வெற்றி!

பாரம்பரிய அரிசிகளை மறந்து ஒட்டு ரகங்களான பொண்மணி, சாவித்திரி, சி.ஆர் 1009, ஐ.ஆர் 20, ஆடுதுறை 37 போன்ற குண்டு ரக அரிசிதான் இட்லிக்கானது என்று நம்பி கொண்டிருக்கிறோம்.

இட்லி மிருதுவாக இருக்க வெளியன் சம்பா அரிசியில் இட்லி மாவு அரைக்கலாம்

 

ஆனாலும் நீங்கள் விரும்பும் மல்லிகைபூ மிருதுவும், வெண்மை நிறமும் கொண்ட பாரம்பரிய சம்பா ரகம் ஒன்று இருக்கத்தான் செய்கிறது. அதன் பெயர்தான் வெளியன் சம்பா.

இதன் சிறப்பு:

175 நாள் பயிர்

சராசரி உயரம் 89 முதல் 101 செ.மீ

ஒரு கதிரில் 81 நெல்மணிகள்

ஒரு ஏக்கருக்கு 600 கிலோ நெல் 1100 கிலோ வைக்கோல்

நிறம்: வெள்ளை

ஒட்டு ரகங்களையே சமைத்து பார்த்த நாம் பாரம்பரிய ரகத்தில் இட்லி எப்படி இருக்குமோ என யோசனையோடவே விவசாயிடமிருந்து வாங்கிவந்த இரண்டு கிலோ அரிசியில் இட்லிக்கு ஊறப்போட்டு ஊற்றிப்பார்த்தேன்.ஒட்டு ரகங்களே தோற்றுபோகும் அளவிற்கு இட்லி மிருதுவாகவும் சுவையாகவும் இருந்தது.

Must Read: படர் தாமரைக்கு தீர்வு தரும் கருடக்கொடி

விவசாயிடம் இருந்த மொத்த நெல்லையும் கொள்முதல் செய்துவிட்டேன். அதை அரிசியாக்கி அங்காடியில் காட்சி படுத்தியாகி விட்டது. வாடிக்கையாளர்களுக்கும் மிகவும் பிடித்து போயிற்று.இயற்கை மற்றும் பாரம்பரிய உணவு தானியங்களை முன்னெடுப்போம். ஆரோக்கியத்தோடு வாழ்வோம்...!!

-படம், தகவல்; பசுமை சாகுல்

#HowToMakeSoftIdli  #MakeTastyIdli #VeliyanSambaRice  #IdliRice 


Comments


View More

Leave a Comments