சப்போட்டா தரும் பலன்கள் என்னவென்று தெரியுமா?


இயற்கை ஒவ்வொரு பருவ காலத்தையும் சில பழங்கள், சில காய்கறிகளால் ஆசிர்வதித்திருக்கிறது. கோடை காலம் தொடங்கி விட்டால் மாம்பழம், தர்பூசணி, நொங்கு என்று அந்த பருவகாலத்தின் பழங்கள் நம் கண்முன்தோன்றுவதையும், அதனை அந்த காலகட்டத்தில் சுவைத்து உண்பதையும் நாம் தவிர்ப்பதில்லை. 

சத்துகள் நிறைந்த சப்போட்டா

கோடைகாலத்தில் சப்போட்டாவும் சாப்பிட உகந்தது. சப்போட்டாவில் எலும்புகளை வலுப்படுத்த உதவும் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், துத்தநாகம், தாமிரம், பாஸ்பரஸ் மற்றும் செலினியம் ஆகியவை நிறைந்துள்ளன. 

வைட்டமின் ஏ,பி,சி நிறைந்த சப்போட்டா ஆரோக்கியமானது

சப்போட்டாவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருக்கின்றன. வைட்டமின்கள் ஏ, பி, சி ஆகியவையும் நிறைந்துள்ளது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. கோடைகாலத்தி அன்றாடம் சாப்பிடக்கூடியவற்றில் சப்போட்டாவையும் சேர்த்துக் கொள்ளலாம். 

 ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்

நிபுணர்களின் கூற்றுப்படி, பொட்டாசியம் ஏராளமாக இருப்பது சோடியம் அளவைக் குறைக்க உதவுகிறது, ரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது மற்றும் ரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது.

இதையும் படியுங்கள்;உடல் எடையை குறைக்கும் இந்த வழிமுறைகள் மிகவும் முக்கியம்

குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது

இது குடலில் அமில சுரப்பை நடுநிலையாக்குகிறது மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் குடல் கோளாறுக்கு பயனுள்ள ஆன்டிவைரல், அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் கொண்டது. 

எலும்புகளை  வலுவாக்கும் 

சப்போட்டாவில் தாதுக்கள், கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய சத்துகள் அதிகம் உள்ளன. தாமிரம் மற்றும் இரும்பு ஆகியவை எலும்பு அடர்த்தியை அதிகரிக்க உதவுகின்றன.  தசை மற்றும் திசு வலிமையை ஊக்குவிக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. 

பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸின் ஒரு நல்ல ஆதாரமாக திகழ்கிறது. தினமும் காலையில் சப்போட்டா சாப்பிடுவது உங்களுக்கு உடனடி ஆற்றலைத் தருகிறது. உடலை கட்டுக்கோப்பாக பேண விரும்புவர்களுக்கு  சப்போட்டா சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது, 

தோல் மிளிரும் 

வைட்டமின்கள் ஏ, சி, ஈ மற்றும் கே ஆகியவை அதிகம் இருப்பதால் அவை சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கிறது. இதனால் தோல் செல்கள் எப்போதும் புத்துயிர் பெற்று விளங்குகின்றன. இதில் பாலிபினால்கள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் ஏராளமாக உள்ளன, இது உங்கள் சருமத்தில் சுருக்கம் விழுவதைத் தடுக்கிறது. மூப்படவதை  குறைத்து, உங்கள் தோலுக்கு இயற்கை பளபளப்பை அளிக்கிறது. 

-பா.கனீஸ்வரி 

#Sapota #Chikoo #HealthySapota  #SummerDiet  #HealthBenefitsOfSapota

 


Comments


View More

Leave a Comments