உடல் சூடு குறைய கம்பங் கூழ்


உடல் சூடு முடி கொட்டுவதற்கான முதல் காரணம். அழுக்கு, வேர்வை இவை தலை அரிப்பிற்கான பொதுவான காரணமாக இருக்கும். உடம்பெல்லாம் அரிப்பு ஏற்படுவதற்கும் இவைதான் பொதுவான காரணங்கள்.

சோப்பு மற்றும் ஷாம்பு களில் இருக்கும் ரசாயனங்களால் ஏற்படும் ஒவ்வாமை கூட சிலருக்கு இம்மாதிரியான பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.

வாரமிருமுறை நல்லெண்ணெய் தேய்த்து ஊற வைத்து சீயக்காய் போட்டு நன்றாக அழுக்கு போகும்படி தலை குளிக்க வேண்டும்.

கோடைகாலங்களில் காலை இரவு (உணவுக்கு முன்பாக) இரண்டு வேளை குளிப்பது நல்லது.

காலையில் காபி டீக்கு பதிலாக வறுத்து ஏலக்காயைப் போட்டு அரைத்த கம்பு மாவை இரண்டு ஸ்பூன் எடுத்து நீரில் கரைத்து கூழ் போல நாட்டு சர்க்கரை சேர்த்து பருகலாம். அல்லது ஒரு லிட்டர் அளவுக்கு நீர் கலந்த  பாலில் இரண்டு ஸ்பூன் கம்பு மாவை கரைத்து ஊற்றி கொதிக்கவைத்து நாட்டு சர்க்கரை சேர்த்து குடித்தால் பாயசம் போன்ற சுவையாக இருக்கும் உடலுக்கு நன்கு குளிர்ச்சி தரும்.

கோடை காலத்தில் சுரைக்காய் உள்ளிட்ட நீர் காய்கறிகளையும், சிறுகீரை, தர்பூசணி இளநீர் நுங்கு உள்ளிட்டவற்றை அதிகம் உட்கொள்வதோடு, நீரும் அதிகம் பருக வேண்டும்.

ஏசி பயன்படுத்துவதை தவிர்த்தாலே உடல்சூடு ஏறுவது பாதி குறைந்துவிடும். தலைக்கு சீயக்காய் உடம்பு குளிக்க பயத்த மாவு அல்லது நலங்கு மாவு பயன்படுத்தலாம்.

வாய்ப்பு இருப்பவர்கள் பயத்தம்பருப்பு, பச்சரிசி, நிழலில் உலர்த்திய- அருகம்புல், நாட்டு ரோஜா இதழ்கள், செம்பருத்தி இதழ்கள்&இலைகள், வேப்பிலை, கோரைக்கிழங்கு, மொச்சை, ஆரஞ்சு தோல், கஸ்தூரி மஞ்சள், புங்கன் கொட்டை, (நுரை தேவை எனில் பூந்திக்கொட்டையையும் சேர்த்துக்கொள்ளலாம்) போன்ற சருமத்திற்கு நன்மை தரக்கூடிய அனைத்து பொருட்களையும் சேர்த்து அரைத்து குளிப்பதற்கு பயன்படுத்தலாம்.

-பூங்குமரன், சித்தமருத்துவர், காரைக்குடி

 #KambuKoozh  #ReduceBodyHeat   #FoodNewsTamil


Comments


View More

Leave a Comments