#shortVideoStory சென்னை தி.நகரில் தரமான தேர் பிரியாணி


சென்னை மாநகரம் ஸ்டீரிட் ஃபுட்டுக்கு பெயர் போனதாகும். வடகறி முதல் பொறிச்ச மீன் வரை அசத்தலான சுவையில் சாப்பிட வேண்டும் என்றால் ஸடார் ஹோட்டல்களை விடவும் ஸ்டீரிட் ஃபுட்டுக்குத்தான் முதலிடம் கொடுக்கலாம். 

அந்த வகையில் தியாகராய நகரில் உள்ள தணிகாசலம் சாலையில் மதியம் ஒரு மணி முதல் இரண்டு மணி வரை ஒரு மணி நேரம் மட்டும் கிடைக்கும் தேர் பிரியாணியை ஒருமுறை சுவைத்தால், மீண்டும் இன்னொரு பிளேட் கொடுங்க என்று வரிசையில் நிற்பீர்கள். சுடசுட விற்கப்படும் தேர் பிரியாணி சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி என இரண்டு வெரைட்டிகளில் கிடைக்கிறது. பிரியாணியுடன் முட்டை, கத்தரிக்காய், தயிர் வெங்காயம், பிரட் அல்வா என்று காம்பினேஷன் சூப்பராக இருக்கிறது. சிக்கன் பிரியாணி வெறும் 80 ரூபாய்தான்.


Comments


View More

Leave a Comments