ஸ்விக்கி உயர் அதிகாரி பதவி விலகலுக்கு என்ன காரணம் தெரியுமா?


ஸ்விக்கி உணவு விநியோக செயலியின்(சிஓஓ) தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருக்கும் விவேக் சுந்தர், தனது பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். நிறுவனத்தின் விதிப்படி அவர் வரும் அக்டோபர் மாத த்தில் இருந்து பதவி விலகுகிறார். அவருக்குப் பதில் அவருடைய பொறுப்புகளை இப்போதைக்கு ஸ்விக்கியின் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி(சிஇஓ) ஸ்ரீஹர்ஷா மேஜெட்டி தற்காலிக அடிப்படையில் கூடுதலாக கவனித்துக் கொள்வார். 

இதையும் படியுங்கள்; ஜொமோட்டோ ஊழியருக்கு பைக் வாங்க பணம் திரட்டிய நெட்டிசன்கள்


விவேக் சுந்தருக்குப் பதில் விரைவில் வேறு ஒரு சிஓஓ நியமிக்கப்பட உள்ளார். ஸ்விக்கியில் இருந்து விலகும் விவேக் சுந்தர், இந்த நிறுவனத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். குறிப்பாக இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் நிறுவனத்தின் பல்வேறு சிக்கல்களை சமாளித்தவர். குறிப்பாக ஸ்விக்கியின் வாயிலாக மளிகைப் பொருட்கள் விநியோகத்தையும் இணைத்து அதனை வெற்றிகரமாக செயல்படுத்தியவர் விவேக் சுந்தர். மேலும் ஸ்விக்கியின் விநியோக சேவையை இந்தியாவில் 500 நகரங்களுக்கு உயர்த்தியவர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார். 

ஸ்விக்கி நிறுவனத்தின் சிஓஓ பதவி விலகுகிறார்

 

ஸ்விக்கியில் பணியில் சேருவதற்கு முன்பு விவேக் சுந்தர், ப்ரோக்டர் அன்ட் கேம்பிள் (procter and gamble ) நிறுவனத்தில் 20 ஆண்டுகளாக பணிபுரிந்தார். குறிப்பாக அந்த நிறுவனத்தில் கிழக்கு / பூமத்திய ரேகை ஆப்பிரிக்க பிரிவு நிர்வாக இயக்குநராக இருந்தார். அப்போது கென்யா, எத்தியோப்பியா, உகாண்டா, தான்சானியா, அங்கோலா உள்ளிட்ட நாடுகளின் விற்பனையை கவனித்துக் கொண்டார். ப்ரோக்டர் அன்ட் கேம்பிள் நிறுவனத்தில் 1998ம் ஆண்டு கணக்கியல் மேலாளராகப் பணியைத் தொடங்கியவர் விவேக் சுந்தர். கொல்கத்தா ஐஐடியில் இருந்து சந்தை, பொருளாதாரம் மற்றும் நிதியில் எம்பிஏ பட்டம் பெற்றிருக்கிறார். 

இதையும் படியுங்கள்; நோய் தொற்றே பரவாயில்லை… கொரோனா காலத்து ஃபுட் டெலிவரி அனுபவங்கள்


“விவேக் [சுந்தர்] நிறுவனத்தில் பெரிய அளவிலான  சிந்தனையை அளவிடுவதில் முக்கிய பங்கு வகித்துள்ளார். தொழில்நுட்ப ரீதியாக சிக்கலான தீர்வுகளுக்கு மாறாக நுகர்வோர் பார்வையில் பெரிய லாபத்தை ஈட்டக்கூடிய எளிய நகர்வுகளைக் கொண்டு வருவதற்கும் அவர் ஒரு முக்கிய பங்கு வகித்தார்” என சுந்தர் குறித்து நிறுவனத்தின் சிஇஓ ஸ்ரீஹர்ஷா மேஜெட்டி கூறியுள்ளார். விவேக் சுந்தர் தான் பதவி விலகும் முடிவு குறித்து நிறுவனத்தின் ஊழியர்களுக்கு மின்னஞ்சலில் தகவல் அனுப்பியிருக்கிறார். அதில் நிறுவனத்துக்கு வெளியே உள்ள வாய்ப்புகளையும் கண்டறியும் நோக்கத்தில் விலக உள்ளதாக தெரிவித்திருக்கிறார். 

பா.கனீஸ்வரி 

#Swiggy  #FoodDelivery  #FoodDeliveryApp  #VivekSunder   #VivekSunderCooSwiggy  

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும் 

 


Comments


View More

Leave a Comments