கசகசா நன்மைகள்; ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும், முகப்பருக்கள் விலகும்


விதைக்காகவும் பாலுக்காகவும் பயிரிடப்படும் சிறு செடி இனம் காயில் இருந்து வடியும் பாலு அபின் எனப்படும் கசகசா பல சரக்கு கடைகளிலும் நாட்டு மருந்து கடைகளிலும் விற்பனை செய்யப்படுகிறது 

1.உள்ளழலாற்றுதல் திசுக்களை இறுக செய்து குருதிப் போக்கை கட்டுப்படுத்துதல் உடலுரமூட்டல் ஆகிய மருத்துவ குணம் உடையது 

2.கசகசா வால்மிளகு வாதுமை பருப்பு கற்கண்டு சமன் எடையாக எடுத்து இடித்து புடித்து நெய் தேன் விட்டு லேகிய பதமாக பிசைந்து வைத்துக்கொண்டு 5 கிராம் காலை மாலை பாலுடன் சாப்பிட்டு வர கிராணி அதிசாரம் விந்து இழப்பு ரத்தமூலம் சீதபேதி ஆகியவை குணமாகும் 

Must Read: தற்சாற்பு வாழ்வியல்குறித்து வரும் 9-ம் தேதி ஆன்லைன் பயிற்சி

3.தேங்காய் துவையலில் கசகசாவை சேர்த்து அரைத்து உணவுடன் நெய் சேர்த்து உண்ண மலத்தை கட்டும் தாது பலம் மிகும். 

4.இது அசைவ உணவில் வாசனைப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது கசகசாவை தண்ணீர் விட்டு அரைத்து முகங்களில் தடவினால் முகப்பருக்கள் மெல்ல மெல்ல விலகும் 

5. இதற்கு பாப்பி செடி விதைகளை தாங்கி இருக்கும் பை முற்றி அது முழுவதுமாக காய்ந்த பிறகு அதிலிருந்து எடுக்கப்படும் விதைதான் கசகசா எனப்படும் இதை பாப்பி செடி என்றும் அழைக்கப்படுகிறது 

நன்றி; ASNசாமி ஆதனூர் 9442311505

#OneHerbalFivePoints  #HealthyHerbal  #ThisDayHerbal


Comments


View More

Leave a Comments