
வீட்டு உணவுகளை படம் எடுத்து பதிவிட்ட ஜொமோட்டோ
உணவு விநியோகத்தில் இந்தியாவில் சென்னை உள்ளிட்ட நகரங்களில் ஈடுபடும் ஜொமோட்டோ நிறுவனம் வாடிக்கையாளர்கள் மத்தியில் புகழ் பெற்று விளங்குகிறது. அண்மையில் இந்த நிறுவனம், வீட்டில் சமைத்த உணவுப் பொருட்களை படம் எடுத்து அதனை வாடிக்கையாளர்களை தமது நிறுவனத்தின் இணையதளத்தில் பதிவேற்றும்படி அறிவுறுத்தியது. அதன்படி நாடுமுழுவதும் பல்வேறு மாநிலங்களில் விதவிதமாக தங்கள் வீடுகளில் சமைத்த உணவுப் பொருட்களை படம் எடுத்து ஜொமோட்டோவின் இணையதளத்தில் பதிவிட்டனர்.
இந்த படங்கள் மூலம் இ ந்தியா பல்வேறு வித்தியாசமான உணவு சுவைகளைக் கொண்டிருக்கிறது என்று வெளி உலகத்துக்கு தெரியவந்தது. மேலும் வீடுகளில் சமைத்து உண்ணும்பழக்கத்தை நிறுத்த வேண்டாம் என்று ஜொமோட்டோ தமது வாடிக்கையாளர்களை அறிவுறுத்தி உள்ளது.
Comments