கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சத்து மிகுந்த இயற்கை உணவுகள்


கொரோனா நோய் தொற்றால் அதிகம் பாதிகப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகமும் இடம் பிடித்துள்ளது. கொரோனா நோய் தொற்றை முற்றிலுமாக தடுப்பதற்கான மருந்துகள் எதுவும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

கொரோனாவின் தாக்கத்தை குறைக்க நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள்தான் மருத்துவமனைகளில் வழங்கப்படுகின்றன. கூடவே சத்து மாத்திரைகளும் வழங்கப்படுகின்றன. தவிர அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவர்களுக்கு சத்தான உணவுகள் வழங்கப்படுகின்றன.

இப்போது தமிழகத்தில் சித்தமருத்துவ முறையிலும் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.

அதன்படி தேனி மாவட்டம் தேவனாப்பட்டியில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய சித்த மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது.

இங்கு சேர்க்கப்படும் கொரோனா நோயாளிகளுக்கு தினமும் மூன்று வேளை சத்து மிகுந்த இயற்கை உணவுகள் அளிக்கப்படுகின்றன.

காலை உணவு

காலை 7 மணிக்கு கொத்தமல்லி, அதிமதுரம், துள்சி, கருப்பட்டி, இஞ்சி, லெமன் ஆகியவை கலந்த மூலிகை தேநீர் அல்லது காஃபி

காலை 8 மணி

 சாமைப்பொங்கல் அல்லது திணை பொங்கல், மாப்பிள்ளை சம்பா அரிசியில் செய்யப்பட்ட இட்லி, நிலக்கடலையால் தயாரிக்கப்பட்ட சட்னியுடன் தரப்படுகிறது.

காலை 11 மணி

எலுமிச்சை ஜூஸ் அல்லது நெல்லிக்காய் ஜூஸ்

மதியம் 1 மணி

மதிய உணவில் எள்ளுசாதம், கருவேப்பில்லை சாதம், பருப்பு சாதம், உளுந்து சாதம் ஏதேனும் ஒன்று. கீரை கூட்டு, மோர், சீரகத் தண்ணீர்.

மாலை 4 மணி

தட்டாம் பயறு சூப் அல்லது கொள்ளு சூப், கறுப்பு கவுணிப் புட்டு அல்லது கேழ்வரகுப் புட்டு.

இரவு 7 மணி

முருங்கை தோசை, புதினா ஊத்தப்பம், சிவப்பு அவல் உப்புமா, கீரை தோசை அல்லது கேரட் தோசை அல்லது கருவேப்பில்லை பொடி தோசை

இரவு 9 மணிக்கு

மிளகு போட்ட பால் அல்லது பூண்டு சேர்க்கப்பட்ட பால்


Comments


View More

Leave a Comments