மூலிகைகளால் நோய் தீர்க்கும் யுக்தி; அடுத்தமாதம் பயிற்சி
நாங்க ஆர்கானிக்குக்கு மாறிட்டோம்... எங்க வீட்டுல தினமும் காலைல இஞ்சி டீதான்... அதேமாதிரி காலை உணவு கொஞ்சம் முளைகட்டுன பயறு, கொஞ்சம் இடியாப்பம், கொஞ்சம் தேங்காய்ப்பால், கொஞ்சம் தினை பாயாசம்... அதேமாதிரி நாங்க கல்லுப்பை விட்டு பல மாசமாச்சி, அதுக்குப்பதிலா இந்துப்புதான் சேர்க்கிறோம்
மேற்குறிப்பிட்ட டயலாக்குகளை சொல்லும் பலரை நாம் பார்க்கலாம். இஞ்சி டீ குடிப்பதாக சொன்ன ஒரு குடும்பம் மட்டுமல்ல பல குடும்பத்தினர் பின்பற்றுகின்றனர். இதனால் அவர்களுக்கு செரிமானத்திலும் குடல் பகுதியிலும் ஏற்பட்டுள்ள தொல்லைகள் சொல்லி மாளாது. அதேபோல் வெந்தது, வேகாதது எல்லாவற்றையும் ஒருசேர உண்பதும் சரியல்ல. அதுவும் செரிமானத்தில் பிரச்சினையை ஏற்படுத்தும். குறிப்பாக இங்கே சொல்ல வேண்டிய ஒரு தகவல் உள்ளது.
Must Read: இயற்கை வேளாண் விளைபொருள் சந்தை
அண்மையில் இல்லம் தேடி மருத்துவம் சென்றபோது ஒரு குடும்பம் சொன்ன விஷயங்கள் அவர்களது புரிதல் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை நினைக்கும்போது கொஞ்சம் வருத்தமாக இருந்தது. அவர்களது வீட்டில் கல்லுப்பு மற்றும் வேறு எந்த வெள்ளை உப்பும் சமையலில் சேர்ப்பதில்லையாம். இந்துப்பைத்தான் பிரதானமாக சேர்க்கிறார்கள்.
அதிலும் நாங்கள் ப்யூர் ராக் சால்ட் உபயோகப்படுத்துகிறோம் என்று பெருமையாக வேறு சொன்னார்கள். இந்துப்பு நல்லதுதான்... அதை மருந்தாகப்பயன்படுத்தலாம். `சிறுநீரகச் செயலிழப்பை இந்துப்பு போக்கும்' என்ற செய்தி முகநூல், வாட்ஸ் அப் மற்றும் பல்வேறு இணையங்களில் பரவலாக பரப்பப்படுகிறது.
உண்மையிலேயே இந்துப்புக்கு அந்த அளவுக்கு சக்தி இருக்கிறதா என்ற கேள்வி எழாமல் இல்லை. சோடியம் நம் உடலில் நீர் மேலாண்மைக்கு மிகவும் முக்கியமான நுண்ணூட்டச்சத்தாகும். சிறுநீரகம் செயலிழந்த பலருக்கு சோடியம் குளோரைடின் அளவு அதிகரித்திருக்கும்.
அதேவேளையில் பொட்டாசியம் குளோரைடு குறைவாக இருக்கும். சிலருக்கு பொட்டாசியத்தின் அளவு அதிகமாக இருக்கலாம். சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டவர்களுக்கு சோடியத்தின் அளவு அதிகரித்து, பொட்டாசியத்தின் அளவு குறைந்திருந்தால் கல் உப்பைத் தவிர்த்து இந்துப்பைப் பயன்படுத்தலாம்.
பொட்டாசியத்தின் அளவு ஓரளவு அதிகரித்ததும் கல் உப்பு, இந்துப்பு என மாற்றி மாற்றி பயன்படுத்தலாம். அதற்காக கல் உப்பை கைகழுவிவிட்டு முழுமையாக இந்துப்புக்கு மாறுவதும் சரியல்ல. இந்துப்பை மட்டுமே தொடர்ந்து பயன்படுத்தினாலும் சிறுநீரகத்தில் சில பிரச்சினை ஏற்படலாம்.
Must Read: கொல்லிமலையும் முடவாட்டுக்கால் கிழங்கும்…
யூரிக் ஆசிட் அதிகமாக இருக்கிறது என்று சொன்ன ஒரு ஆசிரியையிடம் நீங்கள் என்ன உப்பு சாப்பிடுகிறீர்கள்? என்று கேட்டதற்கு நாங்க ஆறு மாசமா இந்துப்புதான் சாப்பிடுறோம் என்றார். முதலில் அதை தவிருங்கள் என்றேன். இந்துப்பை நிறுத்தியதுடன் சில இயற்கை வழிமுறைகளை பின்பற்றியதில் இப்போ இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கிறார். இப்படி ஏகப்பட்ட தவறான உணவு பழக்கத்தை நம்மில் பலர் பின்பற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
பல ஆண்டுகாலமாக மாதவிடாய்க்கோளாறு மற்றும் கர்ப்பப்பையில் பிரச்சினை காரணமாக அவதிப்பட்ட அந்த சகோதரியிடம் அவர் வசிக்குமிடத்தில் இயற்கையாக வளரக்கூடிய அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை மற்றும் மணத்தக்காளி கீரையை சாப்பிடச் சொன்னேன். ஏறக்குறைய ஒன்றரை மாதத்தில் இயற்கையாக மாதவிடாய் வருவதாகச் சொல்லி மகிழ்ந்தார்கள். இப்படி இயற்கை செய்யும் விநோதங்கள் அதிகம். உணவு ஒழுக்கம் மற்றும் எளிமையான மூலிகைகளைக்கொண்டு நோய்களை வெல்லும் யுக்திகள் குறித்து அடுத்த மாதம் பயிற்சி வகுப்புக்கு திட்டமிட்டிருக்கிறேன்.
-எம்.மரியபெல்சின்(திரு.மரியபெல்சின் அவர்களை 095514 86617 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு மருத்துவ ஆலோசனைகளுடன், இயற்கை வேளாண் விளை பொருட்களையும் பெறலாம்.)
#herbalmedicine #benefitsofherbal #herbaltreatmenttraining
Comments