மக்கள் நலச்சந்தை வாரச்சந்தை இனி புதன்கிழமை நடைபெறும்…
வேலூர் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வந்த வார சந்தை வரும் 4ஆம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் புதன் கிழமையன்று நடைபெறும். புத்தாண்டின் இனிய செய்தியாக மக்கள் நலச் சந்தையின் ஒருங்கிணைப்பாளர் கு.செந்தமிழ் செல்வன் தெரிவித்துள்ளார்.
அதன்படி வரும் 4ஆம் தேதி புதன் கிழமை காலை 6.00 மணி முதல் 9.00 வரை மட்டும் சந்தை நடைபெறும் அசோக் பிளான்ட் நர்சரி, எண், 4 , 4வது கிழக்கு மெயின் ரோடு, காந்தி நகர், வேலூர்-6, (ஆக்சிலியம் கல்லூரி ரவுண்டானா அருகில்) என்ற முகவரியில் சந்தை நடைபெற உள்ளது.
Must Read: பெண்களின் வெள்ளைப்படுதலை சரி செய்யும் பொடுதலை கீரை.
இயற்கை விவசாயக் காய்கறிகள், கிழங்குகள்,கீரைகள், பழங்கள், தேங்காய், மூலிகைகள், நாட்டுக் கோழி முட்டை மட்டும் விவசாயிகள் நேரிடையாக விற்கிறார்கள் .
ஆரோக்கியமான காய்கறி வகைகள், நியாய விலையில்- ஒரே இடத்தில் கிடைக்கும் தனித்துவமானச் சந்தையாக இது திகழ்கிறது. மேலும் விவரங்களுக்கு திரு டி.இராஜேஷ் என்பவரை 7092629395 என்ற மொபைல் எண்ணில் அல்லது செந்தமிழ் செல்வன், ஒருங்கிணைப்பாளர், மக்கள் நலச் சந்தை அவர்களை 9443032436 என்ற மொபைல் எண்ணிலோ தோடர்பு கொள்ளலாம்.
#OrganicAgriFoodMarket #OrganicFoods #OrganicValueAddedProducts #MakkalNalaSandhai
Comments