சொமாட்டோவின் கோல்டு திட்டத்துக்குப் போட்டியாக ஸ்விக்கியின் லைட்


இந்தியாவின் பிரபல உணவு விநியோக செயலிகளாக ஸ்விக்கி, சொமாட்டோ ஆகியவை போட்டி போட்டுக்கொண்டு தங்கள் வணிக திட்டங்களை அறிவித்து வருகின்றன. இரண்டு நிறுவனங்களும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

 உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி , ஸ்விக்கி ஒன் என்ற பெயரில் மாத சந்தா திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்நிலையில் மேலும் ஒரு புதிய திட்டமான ஸ்விக்கி ஒன் லைட் என்ற மூன்று மாதங்களுக்கு ₹99 என்ற சந்தா திட்டத்தை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. 

Must Read:சைவமோ, அசைவமோ சுவையை கட்டமைப்பதே முக்கியம்…

இந்த சந்தா திட்டத்தில் சேருபவர்களுக்கு, ரூ. 149க்கு அதிகமாக செய்யும் 10 ஆர்டர்கள் இலவசமாக டெலிவரி செய்யப்படும்.  ₹199க்கு மேல் உள்ள  10 இன்ஸ்டாமார்ட் ஆர்டர்களை இலவசமாக டெலிவரி பெறமுடியும்.  அனைத்து உணவகங்களிலும் கூடுதல் தள்ளுபடியையும் பெற முடியும். ஸ்விக்கியின் பிக் அண்ட் டிராப் சேவையான Genieக்கு 10 சதவீத தள்ளுபடியையும் பெறலாம்.

ஸ்விக்கியின் புதிய திட்டம்

உணவு மற்றும் இன்ஸ்டாமார்ட்டைத் தாண்டி, லைட் பயனர்கள் ஸ்விக்கியின் பிக்-அப் மற்றும் டிராப் சேவையான Swiggy Genie மூலம் டெலிவரி செய்வதில் ₹60க்கு மேல் 10 சதவீத தள்ளுபடியைப் பெறுவார்கள். இது சொமாட்டோ கோல்டு சந்தா திட்டத்துக்கு மாற்றாக அதே நேரத்தில் குறைந்த விலையில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்று சொல்லப்படுகிறது. 

அதே நேரத்தில் இதற்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்விக்கி ஒன் சந்தாவைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ₹149 மற்றும் இன்ஸ்டாமார்ட்டில்  ₹199 ஆகிய ஆர்டர்கர்களை எத்தனை ஆர்டர்கள் வேண்டுமானாலும் இலவசமாக டெலிவரி கட்டணம் இன்றி பெறமுடியும்.  அனைத்து Genie ஆர்டர்களுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி மற்றும் முன்பதிவு செயலியான DineOut இல் கூடுதல் சலுகைகள் உட்பட மிகப் பெரிய பலன்களைப் பெறுகிறார்கள்.

 ஸ்விக்கி ஒன் திட்டத்தின் 10 உறுப்பினர்களில் ஒன்பது பேர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சேவைகளைப் பயன்படுத்துகின்றனர், இது நாட்டின் மிகவும் மதிப்புமிக்க உறுப்பினர் திட்டங்களில் ஒன்றாகும்" என்று ஸ்விக்கியின் வருவாய் மற்றும் வளர்ச்சியின் துணைத் தலைவர் அனுராக் பங்கனமாமுலா கூறினார்.  பண்டிகைக் காலம் தொடங்கும் நேரத்தில் வாடிக்கையாளர்களை ஈர்க்க இது போல இரண்டு உணவு விநியோக செயலி நிறுவனங்களும் தங்கள் வணிகத்தை அதிகரிக்க முயற்சி செய்கின்றன.

  #swiggyonelite #swiggyone  #zomatogold  #fooddeliveryapps 

விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

வாட்ஸ் ஆப் சேனலில் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 

Comments


View More

Leave a Comments