சிறப்புடன் நிறைவுற்ற விதைகளே பேராயுதம் பயிற்சி


விதைகளே பேராயுதம் 

ஒரு நாள் பயிற்சி நிறைவு 

தற்சார்பு விவசாயம் பற்றி உரை 

மதுரையில் 09-10-2021ல் வானகம் மற்றும் தான்யாஸ்  இயற்கையகம் இணைந்து நிகழ்த்திய "விதைகளே பேராயுதம்" பயிற்சி மிகச் சிறப்புடன் நிறைவானது. பயிற்சி நிகழ்வின் துவக்கமாக தான்யாஸ் இயற்கையகத்தின் நிறுவனர் தினேஷ் அவர்கள் மரபு விதைகள் குறித்தான விழிப்புணர்வு பயிற்சியை மதுரையில் ஒருங்கிணைக்க வேண்டிய அவசியம் மற்றும் அதனை வானகம் மூலம் செயல்படுத்த வேண்டிய தேவையை முன்னெடுத்தது குறித்து விவரித்தார் . 

வானகத்தின்  சார்பாக நிகழ்வை வெற்றிமாறன் இரா  ஒருங்கிணைத்து மரபு விதைகளை மக்களிடம் மீட்டளிக்க வேண்டிய அவசியத்தை  ஐயா நம்மாழ்வாரின் வானகம் முன்னெடுக்கும் பணிகளை விவரித்தோம் . GMO மரபணு மாற்றபட்ட விதைகளின் பேராபத்தை சுட்டிகாட்டி BT விதைகளை பயன்படுத்த  நெருக்கப்பட்ட விவாசாயிகளின் தொடர் தற்கொலைகள் மற்றும் Hybrid விதைகளை வைத்து விவசாயிகளைச் சுரண்டும் ஆதிக்க வணிகத்தையும் விவரித்தோம் .

மதுரையில் ஒரு நாள் விதை பயிற்சி

தற்சார்பாய் வாழ்ந்த நம் விவசாயிகள் தற்காலத்தில் அத்தனைக்கும் கம்பெனிகளை நாடியே பொருளாதார நெருக்கடியுடன் வாழ்விழக்கும் அவலத்தின் இக்கட்டான சூழலை தவிர்த்திடவே நம் தலைமுறையினர் தற்சார்பினை நம் மரபு விதைகளிலிருந்து துவங்க வேண்டி விவரித்து கேட்டுக்கொண்டோம்.

தமிழகத்தில் விதை மனுஷி என அறியப்படும் திருமதி பிரியா அவர்கள் மரபு விதைகளை அடையாளப்படுத்துதல் அதனை விதை பெருக்கம் செய்தல்   மற்றும் மரபு விதை சேகரிப்பு நுட்பங்கள் என 14 ஆண்டுகளாக தான் சேகரித்த 500'க்கும் மேற்பட்ட மரபு விதைகளை காட்சிப்படுத்தி தன் அனுபவத்தின் வாயிலாக நிறைய நுட்பங்களை விளக்கி சிறப்பாக பயிற்சியளித்தார் . நிகழ்வின் இறுதியில் தான் சேகரித்த மரபு விதைகளை பயிற்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் விதை பகிர்வு செய்து சமூகத்தில் விதை பரவலாக்கத்தின் அவசியத்தையும் உணர்த்தினார். பயிற்சியின் இறுதியாக பயிற்சியில் பங்கெடுத்தவர்களுகான கேள்வி நேரத்தில் பங்கேற்பாளர்கள் தங்களின் கேள்விகளை கேட்டும் அதற்கான வழிமுறைகளை உள்வாங்கியும் தெளிவடைந்தனர் .

பயிற்சியில் பங்கெடுத்த இயற்கை வழி விவசாயி ஒருவரின் சந்தைப்படுத்துதல் நெருக்கடி குறித்தான கேள்விக்கு?  இயற்கை வழி வேளாண் பொருட்களின் சந்தைப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டுதலின்  அவசியத்தையும் அதன் வழிமுறைகளை  தான்யாஸ் தினேஷ் அவர்கள் தன் வேளாண்மை அனுபவம் மற்றும் சந்தைப்படுத்தும் வரையிலான அனுபவத்திலிருந்து நடைமுறைகளை பகிர்ந்தளித்தார் .நிகழ்வின் இறுதியில் பெரியாறு பாசன விவசாயிகள் சங்கம் தலைவர் திரு அருள்பிரகாசம் தன் இயற்கை விவசாய அனுபவத்தை பகிர்ந்து நன்றி தெரிவித்தார்.  

பயிற்சி பங்கேற்பாளர்களின் வேண்டுகோளாக மதுரை வட்டாரத்தில் 'வானகம்' தொடர்ந்து இதுபோன்ற இயற்கை வழி வேளாண்மை மற்றும் இயற்கை வாழ்வியல் முறையில் பயணிப்பதற்கான பயிற்சிகளைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்று கோரிக்கையாக கேட்டுக் கொண்டது மகிழ்ச்சியளித்தது.பயிற்சியில் பங்கெடுத்த அனைவருக்கும் தானியாஸ் சார்பாக இனிப்புகள் மற்றும் மூலிகை பானங்கள் உபசரித்து நன்றி கூறி மகிழ்ந்தனர் .

- வெற்றிமாறன்.இரா 

( வானகம் - நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம் - அறங்காவலர் , செய்தி மற்றும் தகவல் தொடர்பு பொறுப்பாளர் )

https://m.facebook.com/story.php?story_fbid=4420080754773642&id=100003152847217

#AgriEvents #OrganicTraining #NaturalLife 

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்  டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்


Comments


View More

Leave a Comments