ஆரோக்கிய சுவை அங்காடியில் முதல் 3 ஆர்டர்கள் செய்தவர்களுக்கு நன்றி!


ஆரோக்கிய சுவை அங்காடி கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இது குறித்த அறிவிப்பை எங்களுடைய ஆரோக்கிய சுவை இணையதளத்தில் வெளியிட்டோம்.  ஆரோக்கிய சுவை அங்காடி இணையதளம் தொடங்கி 15 நாட்களுக்கு மேல் ஆகியும் ஒரு ஆர்டர் கூட வராத து கவலையை ஏற்படுத்தியது. 

மே மாதம் முதல்வாரமும் ஆர்டர் ஏதும் இல்லை என்ற நிலையே தொடர்ந்தது. கடந்த மே 8 ஆம் தேதி திருப்பத்தூரை சேர்ந்த ஆர்.கே.குப்புசாமி என்பவர் மருத்துவர் திரு.விக்ரம் குமார் எழுதிய நலக்கண்ணாடி நூலை ஆன்லைனில் ஆர்டர் செய்தார். அவருக்கு உரிய நேரத்தில் புத்தகம் பார்சல் செய்யப்பட்டு, அவருக்கு சென்று சேர்ந்தது உறுதி செய்யப்பட்டது. 

Must Read: லேட்டஸ்ட் வேளாண், உணவு செய்திகள்….

இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை சேர்ந்த திரு. மதிவாணன் 10 ஆம் தேதி நலக்கண்ணாடி புத்தகம் வாங்கினார். அவருக்கும் புத்தகம் அனுப்பப்பட்டு அவருக்கு புத்தகம் உரிய நேரத்தில் டெலிவ்வரி செய்யப்பட்டது. 

கடந்த 10 ஆம் தேதியே சேலம், குகை பகுதியை சேர்ந்த விசி சந்திரமோகன் என்பவர் மூலிகை மருந்து, நலக்கண்ணாடி ஆகிய திரு.விக்ரம் குமார் எழுதிய இரண்டு புத்தக்கங்களை ஆர்டர் செய்தார். அவருடைய ஆர்டரும் அனுப்பப்பட்டது. 

சிறிய வளர்ச்சிதான். மெல்ல, மெல்ல வளர்வதே நல்லது என்று கருதுகின்றோம். இந்த தருணத்தில் எங்கள் இணையதளத்தில் ஆர்டர் செய்து புத்தகங்கள் வாங்கிய மேற்கண்ட மூன்று வாடிக்கையாளர்களுக்கும் நன்றி சொல்லிக் கொள்கின்றோம். மேலும், திரு.விக்ரம் குமார் அவர்களுக்கும் நன்றி சொல்லிக் கொள்வதிதல் பெருமை கொள்கின்றோம். 

அடுத்த கட்டமாக மேலும் பல பொருட்கள் இணையதளத்தில் சேர்க்கப்பட உள்ளன. விற்பனை தொடரும். வாடிக்கையாளர்களின் ஆதரவை மேலும் எதிர் நோக்குகின்றோம். ஆரோக்கிய சுவை அங்காடி இணையதளத்தில் பொருட்கள், புத்தகங்கள் வாங்க இந்த இணைய இணைப்பை கிளிக் செய்யுங்கள்; https://arokyasuvaiangadi.com/

#arokyasuvaiangadi  #organicproductsinoline #healthbooksinonline


Comments


View More

Leave a Comments