மார்ச் 11 மற்றும் 12ம் தேதி திருநெல்வேலியில் சித்த மருத்துவத் தாவரங்கள் கண்காட்சி….


வேளாண் பயிற்சி முகாம்கள் 

வேளாண் மதிப்புக்கூட்டல் பயிற்சிகள் 

மரபுவழி பயிற்சிகள் 

உணவுத்திருவிழாக்கள் 

மருத்துவ முகாம்கள் 

தமிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாடம் வேளாண்மை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அது பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து அளிப்பதே இதன் நோக்கம்.

Must Read: மீன், சிக்கனுடன் தயிர் சேர்த்து சாப்பிடக்கூடாது…

இயற்கை வேளாண் சார்ந்த தகவல்களை, நிகழ்வுகளை arokyasuvainews@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். இதை வெளியிடுவதற்கு எந்த கட்டணமும் இல்லை.

மகளிர் நலன் மரபு வழி மருத்துவ பயிற்சி

கோவை செஞ்சோலை நடத்தும்,மகளிர் நலன் சார்ந்த பெண்களுக்கான ஒருநாள் மரபு வழி மருத்துவ பயிற்சி வரும் 13ம் தேதி( ஞாயிறு) அன்று காலை 09.30  மணிமுதல் மாலை 04.00 வரை கோவை சூலூரில் நடைபெற உள்ளது. இதில் பயிற்சியாளர் ஹீலர். அன்பினி பிரஜனா பயிற்சி அளிக்கிறார்.  பெண்களின் உடல் , மன நலனே குடும்பத்தின் ஆரோக்கியமான சூழலுக்கு அடிப்படையாக உள்ளது.நமது குடும்பங்களின் நலன் காக்கும்பெண்களின் நலனை பேணிக்காக்கவே இந்நிகழ்வு நடத்தப்படுகிறது. .

Must Read:இயற்கையாவே கொழுப்பை குறைக்கும் வழிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்

பயிற்சியில் உடல் - மன நலம் குறித்த உரையாடல், ஐந்தறைப் பெட்டி வைத்தியம், அன்றாட பயன்பாட்டு மூலிகைகள் அறிதல், பருவகால நோய்கள் & தீர்வுகள், மாதவிடாய் பருவ உடல் & மன சிக்கல்களைத் தீர்க்க வழிகள், பிரசவகால உணவுகள், உண்ண வேண்டியவை & தவிர்க்க வேண்டியவை, தாய் - சேய் நலம் ஆகியவை குறித்து விளக்கப்படுகிறது. பங்கேற்பாளர்களின் சந்தேகங்களுக்கும் பதில்கள் அளிக்கப்பட உள்ளன. பயிற்சி கட்டணமாக உணவு & ஏற்பாடு செலவுகளைப் பகிர்ந்துகொள்ள ரூ.300 மட்டும் வசூலிக்கப்படுகிறது. 

மகளிர் நலன் பயிற்சி முகாம்

 

30 பெண்களுக்கு மட்டும் வாய்ப்பு என்பதால் முன்பதிவு செய்து கொண்டு பங்கேற்பது அவசியம். பதிவு செய்ய செந்தில் குமரன்; 95666 65654 ஆவூர்.முத்து 96008 73444 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும். பயிற்சி நடைபெறும் இடம்; செஞ்சோலை இயற்கைவழி வேளாண் பண்ணை(சூலூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில்)கலங்கல் சாலை, சூலுர், கோவை.

திருநெல்வேலியில் சித்த மருத்துவத் தாவரங்கள் கண்காட்சி….

சீட் அறக்கட்டளை 1987-92 இல் சித்த மருத்துவப் பட்டப்படிப்பு படித்த சித்த மருத்துவப் பட்டதாரிகளால் உருவாக்கப்பட்ட அறக்கட்டளை. அரசு சாராத அமைப்பாய் பதிவு செய்யப்பட்டு, பாளை பெருமாள்புரத்தில் சீட் சித்த மருத்துவமனையும், நெல்லை மற்றும் நெல்லையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் பல்வேறு நலப்பணிகள், சித்த மருத்துவ விழிப்புணர்வு முகாம்கள், கல்லூரி மாணவர்க்கான கருத்தரங்குகள், பயிற்சிகள் என கடந்த ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் அமைப்பு.

சீட் அமைப்பு, வருகின்ற மார்ச் 11,12 தேதிகளில் National medicinal plants Board  எனும் தேசிய மருத்துவ தாவரங்கள் வாரியத்துடன் இணைந்து "இன்னும் விரிவாய் அலசப்படாத சித்த மருத்துவத் தாவரங்கள்"- unexplored traits of certain Siddha herbs- concept to market என்கிற தலைப்பில் இரு நாள் கருத்தரங்கை நடத்த உள்ளனர். 

Must Read:தோல்நோய்களை குணப்படுத்தும் கருடக்கொடி…

தமிழிலும் ஆங்கிலத்திலும் நடத்தப்பட உள்ள இக்கருத்தரங்கில்,  தமிழகத்தில் உள்ள முன்னணி மருத்துவத்தாவர ஆய்வாளர்கள் , சித்த மருத்துவர்கள் , மூலிகை தொழில் முனைவோர்கள் என பலரும் தங்கள் கருத்துக்களை பேச உள்ளனர்.கூடவே மூலிகைக் கண்காட்சி, விதைகள்கண்காட்சி, விதைகள் விற்பனை, என பல நிகழ்வுகளும் இதில் நடைபெற உள்ளன

சித்த மருத்துவர்கள், ஆயுஷ் துறை மாணவ மாணவியர், மரபு மருத்துவர்கள், மூலிகை விவசாயிகள் அத்தொழில் முனைவோர் என ஆர்வம் கொண்ட அனைவரும் கலந்து கொள்ள வேண்டியகருத்தரங்கு இது.கலந்து கொள்ள விரும்புவோர் பதிவு செய்ய வேண்டியது மிக அவசியம் பதிவு செய்ய தொடர்பிற்கு: seedcon2022@gmail.com க்கு தொடர்பு கொள்க அல்லது தொலைபேசி- 98424 92955

#AgriEvents #OrganicTraining #NaturalLife #FoodFestivals #AgriEventsAtCiombature #EventsAtTirunelveli


Comments


View More

Leave a Comments