விலைமதிப்பற்ற மீனைப் பிடித்து ஒரே நாளில் கோடீஸ்வரரான மீனவர்


மீன்பிடிக்கும் போது கடலில் புதையல் கிடைத்தால் எப்படி இருக்கும்.  கற்பனை செய்வதற்கு நன்றாகத்தான் இருக்கும். ஆனால், உண்மையில் நடந்தால், சுவாரஸ்யமாகத்தானே இருக்கும். 

கடல் தங்கம் என அழைக்கப்படும் கோல் மீன் 

மகாராஷ்டிரா மாநிலம் கொங்கனில் உள்ள பால்கரின் அருகே இருக்கும்  முர்பே பகுதியைச் சேர்ந்த சந்திரகாந்த் தாரே என்ற மீனவர், 1.33 கோடி ரூபாய் மதிப்புள்ள 157 கோல் மீன்களை(Ghol fish) கடலில் இருந்து பிடித்து வந்தார். இது உலகின் மிக விலை உயர்வான மீன் வகையை சேர்ந்ததாகும். 

‘கடல் தங்கம் என்று அழைக்கபடும் இந்த மீன்களைப் பிடித்து கோடீஸ்வரராக மாறிய அவரது கதையை  நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த செய்தி வைரலாகி வருகிறது. 

மீனவர் சந்திரகாந்த், தாரே கடலில் மீன்பிடிக்க விதிக்கப்பட்ட மழைக்கால தடை  நீக்கப்பட்ட பிறகு, அண்மையில் கடலில், மீன்பிடிக்கச் சென்றார். அவரது வழக்கமான நாட்களைப் போலல்லாமல், 157 கோல் மீன்களை ஒரே நேரத்தில் பிடித்தார். 

படகில் இருந்த சக மீனவர்களிடமும் இது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இது அரிதினும் அரிதாக கிடைக்கும் மீன் வகையாகும். முன்னணி டிஜிட்டல் செய்தி தளத்தில் வெளியான தகவலின் படி கோல் மீன்கள் இந்த அளவுக்கு பெரிய அளவில் பிடிக்கப்பட்டிப்பது சமீபகாலத்தில் அரிதான ஒன்றாகும். இந்த மீன்கள் சந்திரகாந்த் தாரேவின் மகன் சோமநாத் மூலம் ரூ.1.33 கோடிக்கு ஏலம் விடப்பட்டது. 

அதிக விலையுள்ள கோல் மீனின் சிறப்புகள்

கோல் மீனின் சிறப்புகள்  

இந்த மீன் ‘கடல் தங்கம்’ என்று அழைக்கப்படுவதற்கு காரணம் அந்த மீனின்  வயிற்றுப் பகுதி சக்திவாய்ந்த மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது இதனால், இது வெளிநாட்டு சந்தையில் அதிக மதிப்பைக் கொண்டுள்ளது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அதிகம் காணப்படும் கோல் மீன், உலகின் மிக விலையுயர்ந்த கடல் மீன்களில் ஒன்றாகும்.

இந்தோனேஷியா, தாய்லாந்து, சிங்ப்பூர், ஹாங்காங், மலேசியாவுக்கு அதிகம் ஏற்றுமதி ஆகிறது. உணவுக்காகப் பயன்படுத்துவதை விடவும், மருந்து தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக ஆபரேஷனுக்கு பின்னர் தையல் போடுவதற்கான இயற்கையான நூல் தயாரிப்பதற்கு இந்த மீன் பயன்படுத்தப்படுகிறது. இந்த மீனின் புரதத்தில் இருந்து தயாரிக்கப்படும் கரையக்கூடிய தையல் நூல் கொண்டு ஒருவருக்குப் போடப்படும் தையலை மீண்டும் பிரிக்கத் தேவையில்லை. உடலோடு இது கரைந்து விடும். இதனால்தான் இதனை கரையக்கூடிய தையல் நூல் என்று அழைக்கின்றனர். 

கோல் மீன் மிகவும் விலை உயர்ந்தது

கோல் மீன் என்பது ஒரு வகை க்ரோக்கர் மீன் ஆகும், இது உயிரியல் ரீதியாக 'புரோட்டோனிபியா டயகாந்தஸ்' என்று அழைக்கப்படுகிறது. ஆனால், கடல் சுற்றுச்சூழலில் அதிகரித்து வரும் மாசுபாடு இந்த வகை மீன்கள் பெரும்பாலும் அழிந்து விட்டன. அரிதாக கிடைக்கும் வகைகளில் ஒன்றாக மாறிவிட்டது. .இந்த மீன்கள் மிகவும் ஆழ்கடலில்தான் அரிதாக க் காணப்படும். ஆனால் தாரேவில் இந்த மீன் கிடைத்தது ஒரு அதிர்ஷ்டமும் அரிதானதுமான நிகழ்வாகும். 

-ஆகேறன்

#GholFish #SeaGold  #ChandrakantTare #FisherManChandrakantTare

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

Also Read: பல்வேறு நோய்களுக்கு ஏற்ற உணவு முருங்கை கீரை

எங்களைப் பின்தொடர: முகநூல்  , டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்

ஆரோக்கிய சுவை இணையதளத்தின் வளர்ச்சிக்கு உங்களால் முடிந்த நிதி உதவியை அளிக்கவும். நிதி உதவி செய்ய; https://www.instamojo.com/@Arokyasuvai

 


Comments


View More

Leave a Comments