தமிழ்நாட்டில் நடைபெற உள்ள வேளாண் நிகழ்வுகள், பயிற்சிகள், கண்காட்சிகள் குறித்த தகவல்கள்


வேளாண் பயிற்சி முகாம்கள் 

வேளாண் மதிப்புக்கூட்டல் பயிற்சிகள் 

வேளாண் பொருட்கள் விற்பனை தகவல்கள்

தமிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாடம் வேளாண்மை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அது பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து அளிப்பதே இதன் நோக்கம். இயற்கை வேளாண் சார்ந்த தகவல்களை, நிகழ்வுகளை arokyasuvainews@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். இதை வெளியிடுவதற்கு எந்த கட்டணமும் இல்லை. 

 

நெல்லி மதிப்புக்கூட்டல் பயிற்சி 

நெல்லிக்காயை பயன்படுத்தி மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. கோவை .தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் வரும் 21 மற்றும் 22ம் தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி நடைபெறும். 

Also Read: வெளியானது கபசுரகுடிநீரின் இரண்டு ஆய்வுகள்…

பயிற்சியின் போது நெல்லிக்காயில் இருந்து மதிப்பூட்டப்பட்ட நெல்லிக்காய் பானங்களான பழரச பானம் மற்றும் தயார்நிலை பானம், நெல்லி ஜாம், தேன் நெல்லி, நெல்லி கேண்டி, நெல்லி மிட்டாய், பொடி மற்றும் துருவல்  போன்ற உணவுப் பொருட்கள் தயாரிப்பது குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சிக்குப் பின்னர் எவ்வாறு தொழில் தொடங்குவது என்ற வழிகாட்டுதல்களும் அளிக்கப்பட உள்ளது. 

ஆர்வமுள்ளவர்கள் பயிற்சியின் முதல் நாளன்று ரூ.1700 (ஜிஎஸ்டி உட்பட) செலுத்தி பயிற்சி பெறலாம். மேலும் விவரங்களுக்கு அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை, தொலைபேசி எண்; 0422-6611268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 

Also Read:நொறுங்கத் தின்போம்


 

சர்வேதச முருங்கை கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி

 

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் அக்டோபர் 6-ஆம் தேதி முதல் 8ம் தேதி வரை சர்வதேச முருங்கை கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடைபெற உள்ளது. கண்காட்சியில் முருங்கையில் தயாரிக்கப்படும் மதிப்புக்கூட்டு பொருட்கள் இடம் பெறும். 

பெரியகுளம் வேளாண் கல்லூரியில் முருங்கை கருத்தரங்கம், கண்காட்சி

கருத்தரங்கு மற்றும் கண்காட்சியில் பங்கேற்க கீழ்கண்ட வழிமுறைகளில் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும். ediiphbif.org என்ற இணையதளத்தில் https://moringa2021.ediiphbif.org/international-conference-on-moringa-registration-form/ என்ற லிங்கில் முன்பதிவு செய்ய வேண்டும்.  மேலும் விவரங்களுக்கு moringapkm2021@gmail.com என்ற மின்னஞ்சல் அல்லது +91 9361921828,  04546-231726 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விவரம் அறியலாம். 

 

நெல்லி கன்றுகள் விற்பனை 

வேளாண் அறிவியல் மையம், தென்காசியில் நெல்லி கன்றுகள் (NA7, காஞ்சன் - ரூபாய் 40)விற்பனைக்கு உள்ளது. விவசாயிகள் பயன் பெற்று கொள்ளவும். அணுகவும்: வேளாண் அறிவியல் மையம் தென்காசி  (கடையநல்லூர்) Google map- இல்: https://maps.app.goo.gl/n2XiJXWnwW9NtZ838 

 

கோழிக்குஞ்சுகள் விற்பனை

திருச்சிராப்பள்ளி கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வருகின்ற செப்டம்பர் மாதம் 21ஆம் தேதியன்று கோழிக்குஞ்சு விற்பனை நடைபெறுகிறது.  ஒரு நாள் குஞ்சு வரவிருப்பதை தொடர்ந்து ஆர்வமுள்ள விவசாயிகள் அலுவலக எண் 0431-2331715   தொடர்பு கொண்டு ஒருநாள் குஞ்சுகளுக்கு முன்பதிவு செய்யலாம்.

 1. கிராமப்ரியா - ரூ .21 

2. வனராஜா - ரூ .23 

3. கடக்நாத் - ரூ .50 

தொடர்புக்கு; உதவி பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் கொட்டப்பட்டு திருச்சிராப்பள்ளி

#AgriEvents #OrganicTraining #NaturalLife 

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

Also Read: பல்வேறு நோய்களுக்கு ஏற்ற உணவு முருங்கை கீரை

எங்களைப் பின்தொடர: முகநூல்  டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

ஆரோக்கிய சுவை இணையதளத்தின் வளர்ச்சிக்கு உங்களால் முடிந்த நிதி உதவியை அளிக்கவும். நிதி உதவி செய்ய; https://www.instamojo.com/@Arokyasuvai

 


Comments


View More

Leave a Comments