பிரட் முதல் முட்டை வரை நாம் சாப்பிடுவதில் எது சிறந்தது?


 

உங்களுக்கு வொயிட் பிடிக்குமா? ப்ரவுன் பிடிக்குமா? என்றால், அவரவருக்குப் பிடித்த நிறத்தை சொல்வார்கள். ஆனால், உணவு விஷயத்தில் நிறத்தைப் பார்த்து அதன் சத்துக்களை நிர்ணயிக்க முடியாது. எந்த நிற உணவுகள் நல்லது என்பதை முதலில் தெரிந்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியம் காக்கலாம்.உணவில் வொயிட்டா... ப்ரவுனா..? எது உங்கள் சாய்ஸ் என்பதை இப்போது தெரிந்து கொள்வோம். 

பிரவுன் பிரெட் / வொயிட் பிரெட்

இந்த இரண்டும் தயாரிக்கச் சேர்க்கப்படும் மாவில்தான் அவற்றின் நிறமும், சுவையும், ஊட்டசத்துகளும் மாறுபடுகின்றன. வெள்ளை பிரெட்டில் தவிடும், அதன் சத்துகளும் நீக்கப்பட்டு வெறும் மாவுச்சத்துகள் மட்டும் அதிகம் இருக்கும். இதைச் சாப்பிட்டால் வயிறுதான் நிரம்புமே தவிர, ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது. 

Must read: பெண்கள் பீரியட்ஸின் போது உடல் ஆற்றலுடன் திகழ உண்ண வேண்டிய உணவுகள்…

உடலில் எடை அதிகரிக்கும். ஆனால், பிரவுன் பிரெட்டில், தவிடுடன் சேர்த்த கோதுமை மாவை கொண்டு பிரெட் தயாரிப்பார்கள். நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் இதில் அதிகம் இருக்கும். நார்ச்சத்துக்கள், வைட்டமின் ஈ மற்றும் பி, புரதம், இரும்புச் சத்து, மாங்கனீசு, பொட்டாசியம், பாஸ்பரஸ், ஜின்க் ஆகியவை உள்ளன. இது சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது.

பிரவுன் அரிசி / வெள்ளை அரிசி (பாலிஷ் செய்யப்பட்ட அரிசி)

வெள்ளையாகப் பளிச்சென இருக்கும் வெள்ளை அரிசியையே விரும்பி சாப்பிட்டு வருகிறோம். இதனால் நமக்கு எந்தப் பயனும் இல்லை. உமி, தவிட்டைத் நீக்கி தீட்டி வெள்ளையாக்கியப் பிறகு, அதில் உள்ள சத்துகள் எல்லாம் போய், சக்கைகளைச் சாப்பிடுவதில் எந்தப் பயனும் இல்லை. பிரவுன் அரிசியில் வெறும் உமி மட்டுமே நீக்கப்படும். மற்ற எல்லாச் சத்துகளும் அதில் பாதுகாக்கப்படும். இதைச் சாப்பிட்டால்தான் நம் உடலுக்கு நல்லது. ஏனெனில் உடல் எடை அதிகரிக்காது மேலும் சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது.

 

பிரவுன் சர்க்கரை / வொயிட் சர்க்கரை

கரும்பிலிருந்து சாறை எடுக்கும்போது பாக்டீரியா உருவாகும் என்பதால் அதில் ப்ளீச்சிங் பவுடர் சேர்க்கின்றனர். மேலும், அதில் அழுக்கை நீக்குவதற்குப் பாஸ்போரிக் அமிலத்தைப் பயன்படுத்துகின்றனர். சுண்ணாம்பு சேர்த்து வெள்ளையாக்குகின்றனர். பிறகு, உயர் வெப்ப நிலையில் கொதிக்க விட்டு காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா போட்டு வெண்மையாக்குகின்றனர்.

பிரவுன் சுகர் உடல்நலத்துக்கு நல்லது

இப்படித் தயாராகும் சர்க்கரை உண்பதற்கா அல்லது துவைப்பதற்கா என்பதை நாம் தான் முடிவு செய்யவேண்டும். கரும்புச் சாறு பாகுவாகக் காய்ச்சப்பட்டு அவை குறிப்பிட்ட கொதிநிலையுடன் இருக்கையில் அதில் அச்சு வெல்லம், உருண்டை வெல்லம், நாட்டு சர்க்கரை உருவாக்கப்படுகிறது. இவற்றைச் சேர்த்துக் கொள்வதினால் எந்தப் பாதிப்புகளும் இருக்காது.

பிரவுன் முட்டை / வெள்ளை முட்டை

பிராய்லர் கோழிகள் வேகமாக வளர்வதற்கு ஊசிகள் போடப்படுகிறது. அதனால் அவை இடும் வெள்ளை முட்டைகளிலும் மருந்தின் வீரியமோ, தீவனத்தில் கலக்கப்படும் ரசாயனங்களோ நிச்சயம் கலந்திருக்கும். இவற்றை நாம் சாப்பிடுவதால் எந்த ஊட்டச்சத்துகளையும் எதிர்பார்க்க முடியாது. இதுவே, வீட்டில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகளின் முட்டைகளில் எந்தவித கலப்படமும், ரசாயனங்களும் இல்லை என்பதால் சாப்பிடுவதற்கு உகந்தது நாட்டு முட்டைகளே.

உணவில் நீங்கள் தேர்ந்தெடுப்பது பிரவுனாக இருந்தால், உங்களின் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. மாறாக, வெள்ளைதான் வேண்டும் என்றால் அது உங்களின் ஆரோக்கியத்தைக் கெடுப்பதில் முதலிடமாக அமைந்து விடும். வெள்ளையா பிரவுனா... இனி உங்கள் சாய்ஸ்! த்தமான மற்றும் பாரம்பரிய முறையில் தயார் செய்யப்பட்ட, கலப்படமற்ற குறிப்பாக வெள்ளை சர்க்கரை சேர்க்காத நாட்டு சர்க்கரை,  பாகு வெல்லம், பனங்கருப்பட்டி கிடைக்கும்.

-மகேஷ் முத்துசாமி

fssai license no : 22419580000400.

Whats app 7358958581 & 7904804356.

#BrownRiceIsBest    #BrownSugarHealthy  #BrownFoods

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்  டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 
 
 
 

Comments


View More

Leave a Comments