#HealthEventsCalender சேலத்தில் 19ம் தேதி பாரம்பர்ய மருத்துவப் பயிற்சி
சேலத்தில் வரும் 19ம் தேதி செம்பருத்தி மூலிகை மருத்துவம் சார்பில் திரு. எம்.மரியபெல்சின் அவர்கள் பாரம்பர்ய மருத்துவப் பயிற்சியை நடத்த உள்ளார்.
உணவே மருந்து, மருந்தே உணவு என்ற அடிப்படையில் நமது முன்னோர் பின்பற்றி வந்த மிக எளிமையான மருத்துவம் பாரம்பரிய இயற்கை முறையிலான சித்த மருத்துவமாகும்.
தலைவலி, காய்ச்சல், சர்க்கரை நோய், இதயக்கோளாறு, மூட்டு வலி என பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்படும் எளிய மக்கள் முதல் அனைவரும் தங்களுக்கு வரும் பிரச்சினைகளை தாங்களாகவே சரிசெய்துகொள்ளும் விதமாக ஒரு பயிற்சி நடத்தலாம் என திட்டமிட்டு கடந்த மாதம் வெற்றிகரமாக நடத்தினோம்.
Must Read: #ThisdayHealthyHerbs சளி, வாயுவை அகற்றி பசியை உண்டாக்கும் வசம்பு…
சென்னையில் நடத்தப்பட்ட அந்த பயிற்சியை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடத்துமாறு பலரும் கேட்டுக்கொண்டதற்கிணங்க இம்மாதம் சேலத்தில் நடத்தப்படுகிறது. சேலம் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
#SalemEvents #TamilMedicine #PattiVaithiyam
Comments