மதியம் தூங்குவதை தவிர்க்க புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்…
1. அரிசி சாதம் உள்ளிட்ட மாவுச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடக்கூடாது.
2.கோழியிறைச்சி, ஆட்டிறைச்சி அல்லது மீனைப் பொறிக்காமல், வேக வைத்து கிரேவியாக மதிய உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அதிலிருக்கும் புரதச் சத்து உங்களுக்கு ஆற்றல் தரும்.
3. சத்துமிக்க காய்கறிகள், பழங்கள் கலந்த சாலட் எடுத்துக் கொண்டால் தூக்கத்தை தவிர்க்கலாம். பழங்கள், காய்கறிகளில் வைட்டமின் சத்துகள் இருப்பதால் புத்துணர்வு கிடைக்கிறது. .
4. கொஞ்சம் சாதம், ஏதேனும் அசைவம், மற்றும் காய்கறிகள், கீரை உணவு ஆகியவற்றை சாப்பிடுவது சிறந்தது.
5. மதிய நேரத்தில் பீட்சா, நூடுல்ஸ், பர்கர், பாவ்பாஜி, பிரெட் வகைகள் மற்றும் எண்ணெய்யில் பொரிக்கப்பட்ட உணவுகளை நீங்கள் முழுவதுமாக தவிர்க்க வேண்டும்.
#5PointsForHealthy #HealthyLunch #DontSleepAfterLunch #HowToAvoidSleepAfterLunch
Comments