அல்சீமர் வியாதி வராமல் இருக்க என்ன செய்யலாம்..


அல்சீமர் வியாதியிலும் கடைசி கட்டத்தில் கடுமையான மனத்தாழ்வு நிலைக்கு ஆளாகி மன நோய் வந்து இறக்கும் நிலை ஏற்படுகிறது. இந்த அல்சீமர் வியாதியை பற்றி 1906 ஆம் ஆண்டு மருத்துவர். அல்சீமர் என்பவர் விசித்திரமான மன நோயாளும் நினைவு இழப்பாலும் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணிடம் இருந்து கண்டறிந்தார்.

அந்த பெண் இறந்ததும். பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது மூளை மிகவும் சுருங்கி இருந்ததும் நினைவாற்றலுக்கு தேவையான பகுதிகள் சேதமடைந்திருப்பதையும் கண்டார். 

Must Read: இதயநோயாளிகள் கடைபிடிக்க வேண்டிய பழக்க, வழக்கங்கள்…

அதே கால கட்டத்தில் வாழ்ந்த பாரதியார் மிக அருமையான உருக்கமான பாடல் மூலம்  பிரிவின்/நினைவு இழப்பின் கொடுமையை தெரியப்படுத்தியிருக்கிறார் 

அல்சீமர் எப்படி வருகிறது ?

இன்னும் ஆராய்ச்சி நடக்கிறது ஆனால் முடிவு எட்டப்படவில்லை. மரபணுவழியாக  நமது சுற்றுச்சூழலியல் மாற்றங்கள் வழியாக உணவு முறை மாற்றங்கள் வழியாக என்று இந்த நோய் வருவதற்கான காரணங்கள் பல.

இந்த நோய் வராமல் இருக்க என்ன செய்யலாம்?

உடலையும் மூளையயையும் சுறுசுறுப்புடன் வைத்துக் கொள்ள வேண்டும் அதிகம் படித்து. அதிகம் எழுதலாம். ஓவியம் வரையலாம். கவிதை எழுதலாம். மூளையின் நினைவாற்றல் மண்டலத்தை எப்போதும் செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டும்

அல்சைமர் நோய்

நல்ல ஆரோக்கியமான உணவு முறையில் இருக்க வேண்டும்.உடல் பருமன், நீரிழிவு , ரத்த கொதிப்பு , இதய நோய் போன்ற பல்வேறு வாழ்வியல் நோய்கள் இருப்பவர்களுக்கு அல்சீமர் வரும் வாய்ப்பு அதிகம் என்கிறது ஆய்வு

தினமும் உடல் பயிற்சி, நல்ல உறக்கம், குடும்பத்துடன் ஒட்டுறவான வாழ்க்கை, ஈகோ , பொறாமை இல்லாமல் பேராசை அடையாமல் வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்து ரசிப்பதுஇவையெல்லாம் அல்சீமரை தடுக்கும் விசயங்கள்

அல்சீமர் வியாதி கண்டறியப்பட்டவர்களுக்கு நோயை முற்றவிடாமல் தடுக்க நவீன மருத்துவத்தில் சிகிச்சை முறைகள் இருக்கிறது. தங்களுக்கு தெரிந்த யாரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் உடனே மனநல சிறப்பு மருத்துவர்( Psychiatrist)  அல்லது வயது மூப்படைந்தோருக்கான சிறப்பு மருத்துவரை( Geriatrist) உடனே அணுகவேண்டும்.

-Dr.ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர், சிவகங்கை

#AlzheimerDeases #CureFromAlzheimerDisease  Alzheimer Disease

 
 

Comments


View More

Leave a Comments