​உணவுப்பாதுகாப்பு துறையினரின் அதிரடி சோதனை


உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

சமையல் எண்ணைய் விற்பனையாளரிடம் சோதனை

சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் உள்ள ஸ்ரீ மாலையம்மன் ஆயில் ஸ்டோர்ஸ் என்ற மொத்த உணவு எண்ணைய் விற்பனை கடையில் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் சதிஷ்குமார் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த கடையில் தரமற்ற சமையல் எண்ணெய் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்களில் ஒருவர் புகார் தெரிவித்த தால் சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். 

Must Read: #HealthAlert மாசுபட்ட காற்று மூளை கோளாறுகள் என்கிறது சமீபத்திய ஆய்வு…

அங்கு விற்பனை செய்யப்பட்ட சமையல் எண்ணைய் தரமானதா என அறிய அதிகாரிகள் அதன் மாதிரியை எடுத்துச் சென்றனர். மாதிரியை பரிசோதனை மேற்கொண்ட பிறகு அதில் கலப்படம் இருக்கிறதா என்று தெரிந்தால் அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர். 

குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்ட அசைவ உணவுகள்

பொதுவாக சமைக்கப்பட்ட உணவுகளை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து உண்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். ஆனால், அசைவ ஓட்டல்களில் அசைவ உணவுகளை குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருப்பார்கள். வாடிக்கையாளர்கள் கேட்கும்போது அதனை சுட வைத்து சுடசுட சமைத்ததாக கொடுப்பார்கள். 

உணவகங்களில் அதிரடி சோதனை

 

திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை தலைமையில் அதிகாரிகள் அவிநாசி சுற்றுவட்டார பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது குளிர்சாதன பெட்டியில் சமைத்த அசைவ உணவு 9 கிலோ கண்டறியப்பட்டிருக்கிறது. சுண்டல் மற்றும் சன்னா 3 கிலோ ஆகியவையும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்தனர். 

இதே போல ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் ஈரோடு நகரப் பகுதியில் உள்ள உணவகங்கள், பேக்கரி, தேநீர் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். 

Must Read: #6PointsForHealthy சளியை குணப்படுத்தும் மிளகு…

ஈரோடு குமலன்குட்டையில் உள்ள ஒரு உணவகத்தில் சமைத்து குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 4 கிலோ சிக்கன், கிரில் சிக்கன், காலாவதியான 3 பாக்கெட் காளான் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

காலாவதியான பரோட்டா பறிமுதல் 

மதுரையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் முனிச்சாலை,  தெப்பக்குளம், காமராஜர் சாலையில் உள்ள 25-க்கும் மேற்பட்ட உணவகங்களில்   அதிரடி சோதனை மேற்கொண்டனர். செயற்கை வண்ணம் சேர்க்கப்பட்ட 25 கிலோ சிக்கன், 5 கிலோ அழுகிய பழங்கள், 23 கிலோ காலாவதியான பரோட்டா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 


#FSSAIRaid  #FSSAIHotelsRaid   #HealthyFoods #RestaurantsRaid


Comments


View More

Leave a Comments