#ThisdayHealthyHerbs சளி, வாயுவை அகற்றி பசியை உண்டாக்கும் வசம்பு…


1.மணமுடைய கிழங்கு உள்ள சிறுசெடி கிழங்குகள் மருத்துவ பயன் உடையவை உலர்ந்த கிழங்குகள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் 

 

2.உடல் தேற்றுதல் கோழையகற்றுதல் வயிற்று வாய்வு காமம் பெருக்குதல் இசிவு அகற்றுதல் சிறுநீர் மலம் மிகுத்தல் குமட்டல் வாந்தி உண்டாக்குதல் மாதவிலக்கு தூண்டுதல் ஆகிய மருத்துவ குணமுடையது 

 

3.வசம்பை வறுத்துப் பொடித்துக் கால் கிராம் தேனில் கொடுத்து வர சளி வாயு ஆகியவற்றை அகற்றி பசியை மிகுக்கும் வசம்பை சுட்டு சாம்பலாக்கி தேனில் குழைத்து நாக்கில் தடவ வாந்தி தீரும் 

Must Read: #7pointsforhealthy டயாபடிஸ் கண்டறிவது எப்படி?

4.வசம்பைக் கருக்கிப் பொடித்து 100 மில்லி கிராம் அளவாகத் தாய் பாலில் கலக்கி சிறு குழந்தைகளுக்குக் கொடுக்க வயிற்றுப் பொருமல் வயிற்றுப் போக்கு வயிற்றுவலி ஆகியவை தீரும் 

 

5. வசம்பு பெருங்காயம் திரிகடுகு கடுக்காய்த்தோல் அதிவிடயம் கருப்பு உப்பு சம அளவு இடித்துப் பொடித்து ஒரு தேக்கரண்டி காலை மாலை கொடுத்துவர வயிற்றுவலி மூர்ச்சை காய்ச்சலுக்கு பின் உண்டாகும் பலக்குறைவு பைத்தியம் காக்கை வலி ஆகியவை தீரும் 

-ASNசாமி அங்கக ஒருங்கிணைந்த விவசாய பண்ணை மற்றும் மூலிகை பண்ணை ஆதனூர் திருவண்ணாமலை மாவட்டம் 9442311505

#Sweetflag #Vasambu  #BenefitsOfVasambu  #PattiVaithiyam #AcorusCalamus

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 


Comments


View More

Leave a Comments