ரூ400 காபியை ரூ.190க்கு வாங்கிய வாடிக்கையாளரின் உத்தி


பொதுவாக உணவகங்களில் உணவுகளின் விலை அதிகமாக இருக்கிறது என்ற ஒரு கருத்து நிலவுகிறது. நேரடியாக உணவகத்தில் சாப்பிடும் உணவை நீங்கள் ஸ்விக்கி அல்லது சொமோட்டோ போன்ற உணவு விநியோக செயலிகளில் ஆர்டர் செய்து பெறும் போது உணவின் விலை விநியோக க் கட்டணத்துடன் சேர்த்து குறைவாக இருக்கிறது என்ற கருத்தும் சிலரிடம் இருக்கிறது. 

அதே நேரத்தில் உணவகத்தை விடவும் உணவு விநியோக செயலிகளில் ஆர்டர் செய்து பெறும் உணவின் விலை அதிகமாவே இருக்கிறது என்றும் சிலர் கருதுகின்றனர். இந்த சூழலில் வாடிக்கையாளர் ஒருவர் வித்தியாசமான உத்தியை கையாண்டு, உணவகத்தில் நேரடியாக வாங்கி சாப்பிடும் உணவை விடவும் ஆர்டர் செய்து வரவழைக்கப்படும் உணவின் விலை குறைவாகவே இருக்கிறது என்பதை நிரூபித்துள்ளார். 

Must Read: 10 ஆப்பிளை விட 1 விளாம் பழம் சாப்பிடுவதே சிறந்தது…

ஸ்டார்பக்ஸ் என்ற பிரபல கபே பிராண்ட் உணவகத்தில் வழக்கமாக காபி குடிக்கும் வாடிக்கையாளர் ஒருவர், காபியின் விலை அதிகம் இருப்பதை உணர்ந்தார். சந்தீப் மால், என்ற வாடிக்கையாளர் ஒருவர் ஸ்டார்பக்ஸ் கபேக்கு சென்றார். 

காபியை விலை குறைவாக வாங்கிய வாடிக்கையாளர்

கபே  அவுட்லெட்டில் அமர்ந்திருக்கும் போது அங்கிருந்தபடியே சொமோட்டோ செயலியில் காபி ஆர்டர் செய்தார். ஸடார்பக்ஸில் முதலில் ₹400க்கு விற்கப்பட்ட காபியை சொமோட்டா ஆர்டர் மூலம் ₹190க்கு அவரால் பெற முடிந்தது.

இது குறித்து தமது ட்விட்டர் வலைதளப்பதிவில் எழுதியுள்ள சந்தீப் மால், “நான் ஸ்டார் பக்ஸ் நிறுவனத்தில் வழக்கமாக குடிக்கும் காபியின் விலை ரூ.400. இன்றைக்கு ஸ்டார்பக் கபேயில் அமர்ந்தபடி சொமோட்டோ டீலில் ஸ்டார்பக் கபே முகவரிக்கு ஆர்டர் செய்தேன். சொமோட்டோ ஊழியர் என்னுடைய ஆர்டரை ஸ்டார்பக்ஸில் உள்ள என் டேபிளில் எடுத்துக்கொண்டு வந்து என்னிடம் கொடுத்தார்,” என்று குறிப்பிட்டுள்ளார். சந்தீப் மாலின் ட்விட்டர் பதிவு வைரல் ஆக பரவி வருகிறது. 

இதன் மூலம் பிரபல உணவகங்கள் உணவின் விலையை மறுசீரமைப்பு செய்ய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. உணவு செயலிகளுக்கு அதிக தள்ளுபடி விலையில் உணவுகள் கொடுக்கப்படுகிறது என்பதால் அதிலும் மாற்றம் வரும் என்று தெரிகிறது. 

-ரமணி

#fooddeliveryapp #zomato #swiggy #starbuckscoffee

விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 

Comments


View More

Leave a Comments