கோவையில் 9ம் தேதி வர்ம மருத்துவ பயிற்சி….


செஞ்சோலை அமைப்பின் சார்பில் கோவை சூலூரில் வரும் 9ம் தேதி ஞா\யிறு அன்று  வர்ம மருத்துவ பயிற்சி குறித்து அறிமுகம் உரையும்,  அனுபவ குறித்த உரையும் நடைபெற உள்ளது. நமது உடலில் தசைகள், எலும்பு இணைப்புகள், சிறுநரம்புகள், பெருநரம்புகள், நாடிகள், வாயுக்கள் போன்றவற்றின் இயக்கத்தை உடலியக்க வர்ம நெட்டை (CHIROPRACTIC) மூலம் சீராக்கி நலம் தரும் மருத்துவ முறையே வர்ம சிகிச்சை.

இந்த சிகிச்சை குறித்து  9ம் தேதியன்று மதியம் 1.30 மணி முதல் மாலை 4 மணி வரை பாரம்பர்ய  வர்ம வைத்தியர் திரு.ஈஸ்வரன் பயிற்சி அளிக்க உள்ளார். நமது மரபான மருத்துவமுறைகளில் ஒன்றான வர்ம சிகிச்சை குறித்து பயிற்சியில் விளக்கம் அளிக்கப்பட உள்ளது. 

வர்ம பயிற்சி

பயிற்சியில்  வர்ம வைத்தியம் அறிமுகம், வர்ம வைத்தியத்தின் அடிப்படைகள், வாழ்வியல் முறை ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 30 நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. எனவே பயி்சியில் பங்கேற்க முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம். முன்பதிவு செய்ய  7904440266 என்ற மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். 

விருப்ப நன்கொடையே கட்டணமாக வசூலிக்கப்படும். செஞ்சோலை இயற்கை வழி வேளாண் பண்ணை, கலங்கல் சாலை,சூலூர், கோவை என்ற முகவரியில் பயிற்சி நடைபெற உள்ளது. .பயிற்சி நடைபெறும் இடம் குறித்த வரைபடம்;https://maps.app.goo.gl/9GeKqoa8iviNCCai8

#IndroductionOfVarmaPractice  #VarmaPracticeTraining #VarmaKalai


Comments


View More

Leave a Comments