சென்னையில் 27ம் தேதி பெண்களுக்கான இயற்கை வாழ்வியல் பயிற்சி
தமிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாடம் வேளாண்மை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அது பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து அளிப்பதே இதன் நோக்கம்.
Must Read: தென்னிந்தியர்களின் சுவையை ஆக்கிரமித்திருக்கும் குழம்பு வகைகள்
பெண்களுக்கான இயற்கை வாழ்வியல் பயிற்சி
சென்னையில்.*தில்லியம்* குழுவினர் ஒருங்கிணைக்கும்,உடல் நலனும், உள மகிழ்வும்* பெண்களுக்கான இயற்கை வாழ்வியல் பயிற்சி வரும் 27ம் தேதி ஞாயிறு காலை 09.30 முதல் மதியம் 03.00 வரை நடைபெறுகிறது.
இதில் பங்கேற்க 30 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது. வர்ம சிகிச்சையாளர் திருமதி விசுதா செந்தில்குமரன் பயிற்சி அளிக்க உள்ளார். இந்த பயிற்சி முகாமில் வாழ்வியல் முறை, உடலியங்கியல், பூப்பெய்தல்கால அணுகுமுறை, நோய்க்கான காரணிகள், நோயணுகா விதிகள் குறித்து விளக்கம் அளிக்கப்படும்
மேலும், வீட்டுக்குத் தேவையான தற்சார்பு பொருட்களான மூலிகை தேநீர் பொடி, மூலிகை குளியல் பொடி, மூலிகை சீயக்காய் பொடி, மூலிகை பற்பொடி, சத்துமாவு போன்றவை செய்ய கற்றுத் தரப்படும்.
131A,C1, ஸ்ரீசாய்ராம் அவென்யூ, காமராஜர் தெரு, சிவன் கோவில் அருகில் வளசரவாக்கம்,சென்னை 600087 என்ற முகவரியில் பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சி பெற எழுதுபொருட்கள், தேநீர், மதிய உணவு உள்பட ரூ.500 மட்டும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மதியம் - 03.00 முதல் - 05.00 வரை வர்ம சிகிச்சை அளிக்கப்படும், பயிற்சியில் பங்கேற்க முன்பதிவு அவசியம். முன்பதிவு செய்ய திருமதி.மகாலட்சுமி அவர்களை 97899 78201 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
#AgriEvents #OrganicTraining #NaturalLife #FoodFestivals #AgriEventsAtChennai
Comments