பூச்சிகள் அறிவை குழந்தைகளுக்கு கடத்திய நிகழ்வு
குழந்தைகளுக்கான நிகழ்வின் வெற்றியை தீர்மானிப்பது அவர்களின் உற்சாகமான பங்கெடுப்பும் ,நிகழ்வின் சாரத்தை முழுமையாக உள்வாங்கிக் கொண்டதற்கான அடையாளமாக அவர்கள் கேட்கும் கேள்விகளும் தான் .
அந்த வகையில் பூச்சிகள் குறித்த நிகழ்வு வெற்றிகரமான நிகழ்வாக அமைந்தது.திரு. ‘ பூச்சி ‘செல்வம் அவர்கள் பல்வேறு தளங்களில் பூச்சிகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருபவர். அவரின் பூச்சிகள் குறித்த அறிவை குழந்தைகளுக்கு கடத்த வேண்டும் என்று கற்றல் இனிதில் இருந்து நாங்கள் கோரிக்கை வைத்த போது மகிழ்ச்சியோடு அதை ஏற்றுக்கொண்டார் .
Must Read:கடுக்காய் நன்மைகள்; தலைவலி இதய நோயில் இருந்து விடுதலை பெறலாம்…
குழந்தைகளுக்கான நிகழ்வில் முதன்முறையாக பங்கெடுக்கிறார் என்பதும் எங்களுக்கு கூடுதல் பெருமை.பல்வேறு வயதுடைய குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் ஒரு கருத்தை புரிய வைப்பது சவாலான விசயம் . ஆனால் அதனை திரு. 'பூச்சி' செல்வம் அவர்கள் திறம்பட செய்தார் என்பதற்கு, ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை கொஞ்சமும் குறையாத ஆர்வத்துடன் கேள்வி மேல் கேள்விகள் கேட்டு அசத்திவிட்டனர் குழந்தைகள்.
பூச்சிகளை குழந்தைகளின் கைகளில் கொடுத்து, அதனைப் பற்றி விளக்கியது, நிகழ்வின் ஹைலைட். நிகழ்வில் கலந்துகொண்ட குழந்தைகளுக்கு, நன்மை செய்யும் பூச்சிகள் எவை, தீமை செய்யும் பூச்சிகள் எவை எவை என்பது மட்டுமல்லாமல், பூச்சிகள் நம்மை விட எவ்வளவு பெரிய புத்திசாலிகள், பலசாலிகள் என்பது புரிந்திருக்கும்.
இனி அவர்கள் பூச்சிகளை வேறு கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள் என்பதில் துளியும் ஐயமில்லை. நிகழ்வின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த குமரேசன் அண்ணா , பிரபு அண்ணா , திரு. ராஜன் , திரு. மாகாராஜன் , அண்ணன் சபி , சகோதரர் அபுதாஹிர் ராஜா , தோழி பரிதா உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி .
#KnowThePests #BenefitsOfPests #BestGoodAndBad
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல் , டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments