சிறுதானியங்களை உட்கொள்வதால் ஹீமோகுளோபின் அளவு மேம்படுகிறது


சிறுதானிய உணவுகளால்  பல நன்மைகள் 

தினமும் சிறுதானியம் உண்பது நல்லது 

இரும்பு சத்து அதிகரிக்கிறது 

ஹீமோகுளோபின் அளவும் அதிகரிக்கிறது 

வழக்கமான அளவு சிறுதானியங்களை தொடர்ச்சியாக உணவில் சேர்த்துக் கொள்வதன் வாயிலாக இரும்புச்சத்து குறைபாடு, ரத்த சோகையில் இருந்தும் விடுபட முடியும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. 

ஐதராபாத்தை தலைமையிடமாகக் சர்வதேச பயிர் ஆராய்ச்சி நிறுவனம் அரை-வறண்ட வெப்பமண்டலத்திற்கான (ICRISAT) நான்கு நாடுகளில் ஏழு அமைப்புகளின் இது குறித்த ஆய்வுக்கு ஆய்வுக்கு தலைமை தாங்கியது. கண்டுபிடிப்புகள் அக்டோபர் 14 அன்று Frontiers in Nutrition என்ற இதழில் வெளியிடப்பட்டன

மனிதர்களைப் பற்றிய 22 ஆய்வுகள் மற்றும் சிறுதானியங்கள் நுகர்வு மற்றும் இரத்த சோகை பற்றிய எட்டு ஆய்வகங்களின் ஆய்வுகள், நான்கு நாடுகளில் ஏழு அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்டன.  

Also Read: உணவு, உடை இருப்பிடம் மட்டுமல்ல அவரவரது தாய் மொழியும் அவரவருக்கு அடிப்படை உரிமையே...


"சராசரி ஒரு நபரின் தினசரி உணவின் இரும்புத் தேவைகள் அனைத்தையும் அல்லது அதில் பெரும்பாலான பங்கை சிறுதானியங்களால் வழங்க முடியும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.  அதிக அளவு இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகையைத் தடுப்பதற்கும் குறைப்பதற்கும் சிறுதானியங்கள்  நம்பிக்கைக்குரிய உணவாக இருக்கின்றன என்பதையும் ஆராய்ச்சி தெளிவாகக் காட்டுகிறது ”என்று ஆய்வின் முன்னணி எழுத்தாளர் டாக்டர் எஸ் அனிதா குறிப்பிட்டார். 

சிறுதானியங்கள் உண்பதால் இரும்பு சத்து கிடைக்கும்

 

சிறுதானியங்கள் உண்பதால் ஹீமோகுளோபின் அளவு 13.2 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இரும்புச்சத்து கொண்ட ரத்த புரதம்  சராசரியாக 54.7 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்பதும் தெரியவந்துள்ளது. 

ஆய்வில் பங்கேற்ற 1,000 குழந்தைகள், இளம் பருவத்தினர் மற்றும் பெரியவர்கள் ஆகியோருக்கு ஆறு வெவ்வேறு சிறுதானிய வகைகளால் தயாரிக்கப்பட்ட உணவுகள் வழங்கப்பட்டன. ஆய்வுகளில் பங்கேற்பாளர்கள் 21 நாட்கள் முதல் 4.5 ஆண்டுகள் வரை சிறுதானிய உணவுகள் உண்டது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.  கண்டுபிடிப்புகள் அக்டோபர் 14 அன்று வெளியிடப்பட்டது.

Also Read: கருப்பை நீர்க்கட்டிகளை அகற்ற எடையை குறைப்பது முக்கியம்...

இந்த செயலாக்கத்தின் வாயிலாக தரப்படும் இரும்பு சத்து காரணமாக அது உடலுக்குள் சத்தின் அளவை கணிசமாக அதிகரிக்க முடியும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. 

உதாரணமாக, சிறுதானியங்களின் தின்பண்டங்கள் வாயிலாக  கிடைக்கும் இரும்பு சத்து காரணமாக உடலில்  5.4 மடங்கு இரும்பு சத்து அதிகரித்தது, அதே நேரத்தில்  நொதித்தல் உள்ளிட்ட முறைகளில் சிறுதானிய உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது, இரும்பு சத்து மூன்று மடங்கு அதிகமாக கிடைக்கிறது. முளை கட்டிய தானியங்கள் ஆகியவற்றின் மூலம் இருமடங்கு இரும்பு சத்து நமக்கு அதிகம் கிடைக்கிறது. 

சிறுதானியங்கள் உண்பது உடல் நலனுக்கு நல்லது

இது குறித்து தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் (என்ஐஎன்) இயக்குநர் டாக்டர் ஹேமலதா கூறுகையில், இரத்த சோகை உள்ளவர்களிடம்  நடத்தப்பட்ட 19 செயல்திறன் ஆய்வுகளின் அடிப்படையில் தினசரி உணவில் சிறுதானியங்கள் சேர்த்துக்கொள்வது நல்லது என்பது தெரியவந்துள்ளது. உணவு அல்லது பானமாக, எடுத்துக்கொள்ளலாம். இதனால் இரத்த சோகை குறைக்கிறது. சிறுதானியங்களில் உள்ள நுண்ணூட்டச்சத்துக்கள் ஹீமோகுளோபின் நிலையை மேம்படுத்துகிறது என்று கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன."

"இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை குழந்தைகளின் அறிவாற்றல் மற்றும் உடல் வளர்ச்சியை பாதிக்கிறது மற்றும் பெரியவர்களின் திறனைக் குறைக்கிறது. எனவே சிறுதானியங்களை முக்கிய மற்றும் அரசின் உணவுத் திட்டங்களுக்கு கொண்டு வருவது பரிந்துரைக்கப்படுகிறது ”என்று ICRISAT டைரக்டர் ஜெனரல் டாக்டர் ஜாக்குலின் ஹியூஸ் கூறினார்,

-பா.கனீஸ்வரி 
#HealthyMillet  #EatMillet #MilletImproveIron #MilletImproveHaemoglobin
 

Comments


View More

Leave a Comments