மொறுமொறுப்பான மெதுவடை சைட் டிஷ்ஷாக பொட்டுக்கடலை சட்னி செய்யறது ரொம்ப ஈஸி


 

நிறைய சத்துகளைக் கொண்ட உளுந்து வடை 

உளுந்து வடை தயாரிப்பது மிகவும் எளிது 

காலை, மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்றது மெது வடை 

வடைக்கு ஏற்ற பொட்டுக்கடலை சட்னி 

பாரம்பர்யமான உணவு வகைகளிலும், சிற்றுண்டி வகைகளிலும் ஏராளமான சத்துகள் உள்ளன. குறிப்பாக நாம் இன்றைக்கு தெருதோறும் தேநீர் கடைகளில் சாப்பிடும் உளுந்து வடை அல்லது மெது வடையில் எவ்ளவு சத்துகள் உள்ளன என்று உங்களுக்குத் தெரியுமா? 

புத்துணர்ச்சியின் தொடக்கம் உளுந்து வடை 

தினந்தோறும் காலை நேரத்தை புத்துணர்ச்சியோடு தொடங்குவதற்கு தேநீரோடு சேர்த்து உளுந்து வடையும் சாப்பிட்டால் அந்த நாளின் தொடக்கம் சிறப்புறும். அதே போல அலுத்து களைத்த மாலை வேளையில் மொறுமொறுப்பான மெதுவடையை சாப்பிடும்போது மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சியை தருகிறது. 

காலை நேரத்தில் மொறுமொறுப்பான வடை

இவ்வறவு சிறப்புகள் மிக்க  உளுந்து வடை அல்லது மெது வடை என்பது நமது விருந்து உணவுகளில் ஒன்றாக அங்கம் வகிக்கிறது. வடை, பாயாசத்துடன் சாப்பாடு என்று சொல்லும்போது அந்த விருந்தின் அம்சமே அலாதியானது. வீட்டில் நடக்கும் விஷேஷமான நிகழ்வகளின்போது மெதுவடை இல்லாமல் அந்த நிகழ்வு பூர்த்தியாவதில்லை. இந்த அளவு நமது உணவு பாரம்பர்யத்தில் இடம்பெற்றுள்ள மெது வடையில் பல ஆரோக்கியமான நன்மைகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?

இதையும் படியுங்கள்: தேன்வில்வம் சாப்பிட்டால் 21 விதமான நன்மைகள்


எண்ணற்ற சத்துகள் 

நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல சத்துகள் உளுந்தில் உள்ளன. அதிலும் கருப்பு உளுந்தில் கூடுதல் சத்துகள் உள்ளன. கருப்பு உளுந்து நீரழவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கக் கூடியது. கொழுப்பை குறைக்கும் தன்மை கொண்டது. நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது. எனவே இதய பாதுகாப்புக்கு உளுந்து மிக சிறந்த உணவாகும். இது தவிர உளுந்தில் இரும்பு சத்து, கால்சியம், புரதம் போன்ற சத்துகளும் உள்ளன. நார் சத்து அதிகம் உள்ளது. பி.காம்ப்ளக்ஸ், வைட்டமின் ஏ போன்ற சத்துகள் உள்ளன. 

வடை எளிய, ஆரோக்கியமான உணவு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவேதான் காலையில் அல்லது மாலையில் சிற்றுண்டியாக தமிழர்களால் விரும்பி உண்ணப்படுகிறது. தேநீர் கடைகளில் காலை, மாலைவேளைகளில் சுட, சுட மொறுப்புப்பான வடையைஉண்பது மிகுந்த ஆனந்தம் தரும் விஷயம். ஒரு உளுந்த வடை ஒரு தேநீர் குடித்து விட்டால், பின்னர் 9 மணிக்கு மேல் காலை உணவு உட்கொண்டால் போதுமானது என்று பழக்கப்படுத்திக் கொள்பவர்களுக்கும் இருக்கின்றனர். 

 

வடை தயாரிக்க தேவையான பொருட்கள்

வடை தயாரிக்க சத்து மிக்க உளுந்து தேவை

உளுந்த வடையை வீட்டிலேயே செய்தும் சாப்பிடலாம். மாலை வேளைகளில் குடும்பத்தோடு சிற்றுண்டி சாப்பிடுவதற்கான முதல் சாய்ஸ் மொறு மொறுப்பான வடை என்பதாகத்தான் பலரது பதில்கள் இருக்கும். மொறு, மொறுப்பான வடை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.  முதலில் உளுந்து 250 கிராம் எடுத்து ஊற வைத்துக் கொள்ளுங்கள். உளுந்து ஊறுவதற்குள் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பில்லை எல்லாம் நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். 

மொறு, மொறுப்பாக வர அரிசு மாவு சேர்க்கலாம்

உளுந்து நன்றாக ஊறிய பின்னர் அதனை கிரைண்டரில் போட்டு அரைத்துஎடுக்க வேண்டும். மைபோல அரைக்க வேண்டும். வடை மொறு, மொறுப்பாக வர கொஞ்சம் அரிசி மாவை உளுந்து மாவில் கலந்து கொள்ளலாம். 

ஊற வைத்த உளுந்தை நைசாக அரைக்க வேண்டும்

இதன் பின்னர் நீங்கள் அறுத்து வைத்துள்ள பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பில்லை ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். உடல் நலனுக்காக இஞ்சி, மிளகு ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். போதுமான அளவு உப்பு சேர்க்க வேண்டும். பின்னர் இதனை  நன்றாக மாவுடன் சேர்க்க வேண்டும். 

பொன்னிறமாக வந்ததும் எடுக்கலாம்

செக்கில் ஆட்டிய சுத்தமான நல்லெண்ணைய் அல்லது கடலை எண்ணைய்  வடை சட்டியில் ஊற்றி காய வைக்க வேண்டும். எண்ணைய் காந்த பின்னர் வடை மாவை எடுத்து இலையில் வைத்து வடைபோல தட்டி அதனை எண்ணைய் சட்டியில் போட்டு எடுக்க வேண்டும்.

பொன்னிறமாக வெந்த உடன் வடையை எடுத்து விட வேண்டும்

வடை பொன்னிறத்தில் வெந்ததும் இன்னொரு பக்கம் திருப்பிப் போட வேண்டும். இரண்டு பக்கமும் வெந்த உடன்  எடுத்து விட வேண்டும். அதற்கு மேல் வேக வைத்தால் கருகிவிடும். அரிகரண்டியில் வடைகளை எண்ணையில் இருந்து பாத்திரத்தில் வைக்க வேண்டும். 

வடையின் சூப்பர் சைட் டிஷ் பொட்டுக்கடலை சட்னி

மொறு, மொறுப்பான வடை தயார் இதனை அப்படியே சுடச்சுட எடுத்து சாப்பிடலாம். வடையோடு இன்னொன்று சேர்ந்தால் அதன் சுவையே வேறு வகைதான். ஆம். பொட்டுக்கடலை சட்னி வடையோடு சேர்த்து சாப்பிட்டால், மொறு, மொறுப்பான வடைக்கு கூடுதல் சுவை தரும். 

இதையும் படியுங்கள்: கற்றாழை பாயசம் சாப்பிட்டிருக்கிறீர்களா?

சட்னிக்கு தேவையான பொருட்கள் 

சட்னி தயாரிக்க முதலில் தேங்காயை துருவி எடுத்துக் கொள்ளவும், பின்னர் தேவையான அளவு பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், இஞ்சி, கல் உப்பு ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். 

மாலை நேரத்தில் மொறு மொறு வடையுடன் சட்னி

பின்னர் எண்ணைய் சட்டியில் கொஞ்சம் எண்ணைய் ஊற்றி, கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய்,. கறிவேப்பில்லை எல்லாம் போட்டு பின்னர் அதனை அப்படியே அரைத்து வைத்துள்ள சட்னியில் போட்ட வேண்டும். அற்புதமான சுவையான சட்னியும் தயாராகி விட்டது. 

மாலை நேரத்துக்கு சுவையூட்டும் வடை 

மாலை நேரத்தில் குழந்தைகளுடன் இந்த மொறுமொறுப்பான வடையை, சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால், மாலைப்பொழுது அற்புத தருணமாக இருக்கும். ஒருமுறை இப்படி வடை செய்து சட்னி வைத்து சாப்பிட்டு பாருங்கள். குழந்தைகளுக்கும், கணவருக்கும், உறவினர்களுக்கும் கொடுங்கள். மீண்டும், மீண்டும் செய்து தரும்படி சொல்வார்கள். 

பா.கனீஸ்வரி 

#MeduVadai  #How To Prepare Medhu Vadai in Tamil  #HealthyUlunthuVadai  #EatMeduVadai

#CookingTipsTamil

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


Comments


View More

Leave a Comments