ரவா இட்லி, தக்காளி சட்னி சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற காலை உணவு


வாழ்வியலின் தற்போதைய சூழலில் சர்க்கரை  நோய் என்பது பலருக்கும் வந்திருக்கிறது. ரத்த த்தில் சக்கரை அளவு ஏற்ற இறக்கமாக இருப்பது, உடலில் இன்சுலின் சுரப்பதில் குறைபாடு, இன்சுலின் சுரக்க முடியாத உடல் நிலை என்று இவையெல்லாம் சர்க்கரை நோய்க்கான காரணிகளாகும்.

சர்க்கரை நோயாளிகளிலேயே டைப் ஒன்று, டைப் 2, கர்ப்பகால சர்க்கரை நோயாளிகள் என்று மூன்று வகைகள் உள்ளன. இது தவிர சர்க்கரை நோய் ஏற்படும் அபாயம் உள்ளவர்கள், சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் உள்ளவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். சர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்துவது என்பதற்கான முறைகள் ஏதும் இல்லை. கட்டுக்குள் வைத்திருப்பதற்குதான் மருந்துகள் உள்ள. முறையான வாழ்க்கை சூழல், உணவு பழக்கம் வாயிலாக சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். உரிய நேரத்தில் சர்க்கரை நோய் இருப்பதை அறிந்து அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், கண்பார்வை கோளாறு, சிறுநீரக கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எடை ஏறி இறங்கும் நிலையும் ஏற்படும்.

எனவே உணவில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்ளவேண்டும். குறிப்பாக காலை நேர உணவு என்பது ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். காலை நேரத்தில் வறுத்த பொறித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் உண்டால் அவை சர்க்கரை நோயாளிகளின் உடல் நிலையே மேலும் மோசமாக்கிவிடும். கிளைசெமிக் எனப்படும் உணவில் உள்ள  கார்ப்போஹைட்ரேட்டுகளின் அளவைப் பொறுத்து ஏற்ற உணவை சர்க்கரை நோயாளிகள் எடுத்துக் கொள்ள வேண்டும். ரவை அல்லது கோதுமை ரவையால் செய்யப்பட்ட இட்லியை சாப்பிடுவது நல்லது. ரவா உப்புமா அல்லது கோதுமை ரவை உப்புமாவும் சாப்பிடலாம். ரவை இட்லி மாவுடன், கேரட் சேர்த்து இட்லி சுட்டு சாப்பிடலாம். இது மிகவும் ஆரோக்கியமானது. அத்துடன் தக்காளி சட்னியும் சைட் டிஷ் ஆக சாப்பிட வேண்டும். இது சர்க்கரை நோயாளிகளுக்கான சிறந்த உணவாக இருக்கிறது. சர்க்கரையின் அளவும் கட்டுக்குள் இருக்கும்.

-பா.கனீஸ்வரி 

#RawaIdli   #TomatoChutney #BreakfastForDiabetics


Comments


View More

Leave a Comments