இயற்கை வளங்களை பாதுகாக்கும் கல்விமுறை தேவை; உழவர் திருநாளின் சிந்தனை
நாம் நமது குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்து, நன்றாக படிக்கவைத்து ஒரு வேலையில் அமர்த்தி அல்லது ஒரு தொழில் துவங்கி கொடுத்து அவருக்கு ஒரு நல்ல துணையுடன் வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்துக் கொடுத்து வாழ வழிவகை செய்கிறோம்
இதேபோல்தான் இயற்கையும் தனது வாழ்நாள்க்கு அப்புறம் தன்னுடைய இனத்தையும் நாம் உயிர் வாழ தேவையான நல்ல ஒரு சுகாதாரமான சூழ்நிலையில் உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் தனது விதைகள் மூலம் மற்றும் விழுதுகள் கொம்புகளை நிறுவுதல் போன்ற அடிப்படையில் மரங்கள் நமக்கு பேரு உதவியாகவும்
Must Read: மாதவரம் அருகே 2 கி.மீ தொலைவில் அடையாளம் காணப்பட்ட 36 மூலிகைகள்…
உயிர் வாழ தேவையான இயற்கை சூழ்நிலையும் காற்று மாசுபாட்டை தடுத்து சுவாசிக்க தேவையான காற்றையும் தந்து பூமியை குளிர்வித்து மழை உருவாக்கி பூமி வாழ் உயிரினங்கள் அனைத்தையும் வாழ வைக்கிறது ஆனால் இப்படி இருக்கும் இயற்கையை நாம் எந்த அளவில் நேசிக்கிறோமா? நேசிக்கவில்லை. நேசிக்க வில்லை என்பதை விட இயற்கையை பாதுகாக்க மறந்து விட்டோம் மனிதன் தன் சுயநலத்தால் இயற்கையைக் கட்டுப்படுத்தி வாழவேண்டும் என்று நினைத்து அழித்துக் கொண்டிருக்கிறான்.
ஆனால் இயற்கையை அழித்து மனிதனால் வாழ முடியாது என்பதை உலகிற்கு நிரூபித்துக் கொண்டு வருகிறது இயற்கை ஆம் இளைய தலைமுறைக்கு இனியாவது இயற்கையை பாதுகாக்கவும் நல்ல ஒரு சுகாதாரமான சூழ்நிலையை உருவாக்கவும் விவசாயத்தை மேம்படுத்தவும் ஒவ்வொருவருக்கும் ஒரு அறிவுரை அல்லது ஒரு இயற்கையை பாதுகாக்க அறிவுரைகளை வழங்கி அவர்களை மாற்ற வேண்டும் அதற்கு ஒவ்வொரு குழந்தையையும் தனிப்பட்ட முறையில் ஒவ்வொருத்தராக சொல்லிக்கொடுத்து அவர்களை நல்ல மனிதன் ஆக்குவது என்பது சற்று சிரமம்தான்
அதற்கு பள்ளி கல்லூரிகள் போன்றவற்றில் இயற்கை வளங்களை பாதுகாத்தல் மற்றும் இயற்கை விவசாயத்தை மேம்படுத்தும் போன்ற வழிமுறைகளை பற்றி செய்முறை விளக்கங்களுடன் நல்ல ஒரு கல்வி முறைகளை கொண்டு வந்தால் நல்ல ஒரு சிறப்பான அழிவில்லா இயற்கை வளங்களையும் இயற்கை விவசாயத்தையும் நல்ல முறையில் பேணி காத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல முடியும் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்
என்றும் உங்களுடன் ப.மா.மு.பாலசாமி, 9865424691, சின்ன கானூர் கிராமம், திருப்பூர் மாவட்டம்
#NeedOfAgriEducation #EducateAgri #HowToDevelopAgriculture
ஆரோக்கியசுவை இணையதளத்தில் விளம்பரம் செய்ய; 7397477987 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளவும்
Comments