சென்னை ஃபேமஸ் வடகறி இனி ஐதராபாத் உணவுப் பிரியரும் ருசிக்க முடியும்…
உணவு இப்போது நமது இடத்துக்கு தேடி வரும் வகையில் உணவு வகைகளை உணவு விடுதிகளில் இருந்து ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள் நமக்கு விநியோகிக்கின்றன. உணவை முதலில் டெலிவரி செய்வது யார் என்ற போட்டியில் உணவு விநியோக செயலிகள் பல புதுபுது திட்டங்களை அறிவித்துள்ளன. அதன்படி ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஜோமேட்டோ ஒரு புதிய திட்டத்துடன் களம் இறங்கி இருக்கிறது.
Must Read: இன்றைய இயற்கை வேளாண் சந்தை
இதுவரை ஒரு குறிப்பிட்ட நகரில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் 10 கிலோ மீடர் சுற்றளவு உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே உணவு விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் பெருநகரங்களுக்கு இடையே உணவு டெலிவரி சேவையை வழங்க ஜொமோட்டோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சென்னையில் புகழ்பெற்று விளங்கும் வடகறியை இனி பெங்களூரில் உள்ளவர்கள் ஆர்டர் செய்து வாங்க முடியும். ஆர்டர்கள் விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டு வெளிமாநிலங்களில் உள்ள நகரங்களுக்கு டெலிவரி செய்யப்பட உள்ளன.
Must Read: #5PointsForWeightloss எந்த வயதிலும் எடையை குறைப்பதற்கான 5 சிறந்த உணவுப் பழக்கங்கள்
இதற்கு இன்டர் சிட்டி உணவு விநியோகம் என்ற பிரிவை ஜொமோட்டோ தொடங்கியுள்ளது. இந்தியாவில் எந்த பகுதியில் இருந்து எந்த ஒரு பகுதிக்கும் உணவு ஆர்டர் செய்து பெற முடியும்.
பரிசோதனை அடிப்படையில் உத்தரபிரதேச மாநிலம். குருகுராம், டெல்லியில் உள்ள தெற்கு டெல்லி பகுதியி்ல் இந்த இன்டர் சிட்டி டெலிவரி முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் வெற்றியைப் பொறுத்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கும் இது அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிகிறது.
#InterCityFoodDelivery #ZomatoNewService #ChennaiFoodsCanGetSameDaySoon #FoodDeliveryApp
Comments