ஆகஸ்ட் 28; இன்றைய இயற்கை வேளாண் சந்தை
ஆரோக்கிய சுவை இணையதளத்தின் இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் சந்தைக்கு வரவேற்கின்றோம். தினந்தோறும் இந்தப் பகுதி இடம் பெறும். இயற்கை வேளாண் பொருட்களை விளைவிக்கும் விவசாயிகள், இயற்கை வேளாண் விளைபொருட்களை விற்கும் அறப்பணியில் ஈடுபடும் நபர்களின் பொருட்கள், அவர்கள் தரும் விலை விவரங்களுடன் இங்கு பட்டியலிடப்படும். இதற்கு எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. இயற்கை வேளாண் விளைபொருட்கள் பலரிடம் சென்று சேர வேண்டும். நேரடியாக விவசாயிகள் பலன் பெற வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
பனைவிதை விற்பனைக்கு
பனை விதை நிறைய தேவைப்படுவோர் நேரடியாக வந்து வாங்கிச் செல்லவும் எங்கள் பகுதி கிராம மக்களிடம் தகவல் சொல்லி அவர்களால் சேகரிக்கப்பட்ட பனை விதை நிறைய இருக்கிறது ஒரு பனை விதை ஒரு ரூபாய் தொடர்புக்கு சிகா லெனின் கீரமங்கலம் 9047357920 புதுக்கோட்டை மாவட்டம்
எள் விற்பனைக்கு
இயற்கை ஆர்வலர்கள் கவனத்திற்கு இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்பட்ட எள் ரகம் டிஎம்வி7 விற்பனைக்கு உள்ளது. பசுந்தாள் உரப்பயிர் விதைத்து மடக்கி உழவு செய்து ஆட்டுக் கிடை போட்டு உழவு செய்த வயலில் அசோஸ்பைரில்லம், பாகசோபாக்டீரியா உயிர் உரங்கள் போட்டு , அக்னி அஸ்திரம், தோமோர்கரைசல் மற்றும் வேப்பெண்ணெய் கரைசல் ஆகியவை பூச்சி விரட்டிகளாக பயன்படுத்தப்பட்ட எள் 150 கிலோ இருப்பு உள்ளது. எண்ணெய் ஆட்டுவதற்கு உகந்த எள் பத்து கிலோ ஆட்டினால் 5 லிட்டர் சுத்தமான நல்லெண்ணெய் கிடைக்கும். தொடர்புக்கு...முனைவர் மதுரை சு. கிருஷ்ணன்.. 9042090063.
ரோஜா குல்கந்து விற்பனைக்கு
ரோஜாப்பூ குல்கந்து ஒரு கிலோ ரூபாய் 480 மட்டுமே வேண்டும் அன்பர்கள் 9790008071 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் வரும் பத்து நாட்களுக்கு தமிழகத்தில் அனைத்து பகுதிகளுக்கு பார்சல் சர்வீசில் அனுப்பப்படும்
உடலுக்கு நல்லது நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்தது இதை தினமும் உண்பதால் செரிமான பிரச்சினை தீரும் வாய்வு பிரச்சினை தீரும் மலச்சிக்கல் தீரும் நன்கு பசியெடுக்கும்
#OrganicFoods #TodayOrganicPrice #OrganicProducts #OrganicMarket #OrganicSandai
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
Also Read: பல்வேறு நோய்களுக்கு ஏற்ற உணவு முருங்கை கீரை
எங்களைப் பின்தொடர: முகநூல் , டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments