ஜார்கண்ட் மக்களின் சுவையான உணவுகள் என்னவென்று தெரியுமா?


ஜார்கண்ட் மாநிலத்தின் பாரம்பர்ய உணவுகள் 

பாரம்பர்ய ஜார்கண்ட் உணவு முறை 

ருசிமிக்க மூன்று ஜார்கண்ட் உணவுகள் 

ஜார்க்கண்டின் உணவு அதன் அண்டை மாநிலமான பீகாரிலிருந்து வேறுபட்டதல்ல. ஜார்கண்ட் உண்மையில் நேர்த்தியான, வித்தியாசமான உணவு முறையை கொண்டுள்ளது.  இந்த மாநிலத்தின் மக்கள் முற்றிலும் தனித்துவமான உணவு பழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர்.. குறிப்பாக அந்த மாநிலத்தில் கடுகு எண்ணெயை சமையலில் பயன்படுத்துவது வழக்கம். இது உணவுக்கு நறுமணத்தை அளிக்கிறது.

ஜார்க்கண்ட் மக்களின் மதிய உணவில் ரொட்டி, அரிசி, சப்ஜி மற்றும் ஆச்சார் ஆகியவை அன்றாடம் இருக்கும்  இங்கே, ஜார்கண்ட் மாநிலத்தின் மூன்று முக்கிய உணவு வகைகளை மட்டும் பார்க்கலாம். 

Also Read: பாரம்பர்ய அரிசி வகைகள், சிறுதானியங்கள் இணைந்த ஃப்லேக்கிஸ்

ருக்ரா எனும் ஜார்கண்ட் மாநில உணவு

அதிக கலோரிக் கொண்ட உணவுப்பொருளாகும். எனவே இந்த உணவை ஜார்கண்ட் மக்கள் ஆரோக்கிய உணவாகவே உண்கின்றனர். பருவமழை காலத்தில் ருக்ரா காளான் அதிகம் கிடைக்கும் என்பதால் பருவமழை காலங்களில்  ஜார்கண்ட் மக்களால் அதிகம் விரும்பப்படுகிறது 

சில்கா ரொட்டி

இந்தியாவின் கிழக்குப்பகுதியில் உள்ள ஜார்கண்ட்  மாநிலத்தில் பீகாரின் உணவின் தாக்கமே அதிகம் இருக்கிறது. பீகார் அரிசியைப் போலவே இந்த மாநிலத்திலும் அதுதான் பிரதான உணவாக உள்ளது.

 

சில்கா ரொட்டி எனும் பாரம்பர்ய ஜார்கண்ட் உணவு

தென்னிந்தியர்கள் உண்ணும் தோசையைப் போல  அரிசி மாவு மற்றும் பீசனை பயன்படுத்தி சில்கா ரொட்டி தயாரிக்கப்படுகிறது. பண்டிகை காலங்கள் மற்றும் விசேஷ சமயங்களில் வீடுகளில் தயாரிக்கப்பட்டு சனா தால் சட்னியுடன் சேர்த்து பரிமாறப்படுகிறது. தனித்துவமான சுவை கொண்டதாகும். .

Also Read: நீங்கள் ஒருபோதும் தவறவிடக்கூடாத 5 கடல் உணவுகள்!

துஸ்கா எனும் உணவு ஜார்க்கண்டின் மிகவும் பிரபலமான உணவாகும்.  துஸ்காவை ருசிக்காமல் ஜார்கண்ட் உணவு முழுமையடையாது. அந்த மாநில மக்கள் இந்த உணவை காலை உணவாக உட்கொள்கின்றனர்.  

ஜார்கண்ட் மாநிலத்தின் துஸ்கா உணவு

அரிசி, பருப்பு மாவில் இருந்து துஸ்கா தயாரிக்கப்படுகிறது, துஸ்காவுடன் கருப்பு கொண்டைக்கடலையில் செய்யப்பட்ட எளிய கறியை சைட்  டிஷ் ஆக சேர்த்து சாப்பிட்டால், நாவுக்கு என்றென்றும் மறவாத அற்புதமான சுவையை கொடுக்கும். 

-ஆகேறன்

#JharkhandFamousFood #JharkhandFood  #Rukra  #ChilkaRotti  #Dhuska


Comments


View More

Leave a Comments