
மழைக்கால, சிற்றுண்டி கார அடை எப்படி செய்வது என தெரியுமா?….
மழை பெய்யும்போது ஏதேனும் சூடாக சாப்பிட வேண்டும் போல தோணுவதை யாராலும் மறுக்கமுடியது. உணவு மட்டுமின்றி சூடாகா ஒரு காஃபி அல்லது தேநீர் குடிப்பது கூட மிகவும் சுவையானதாக அந்த நேரத்தின் இனிமையைக் கூட்டுவதாக இருக்கும்.
வீட்டில் விடுமுறை நாளில் மழை வேறு பெய்து கொண்டிருக்கும்போது இதே எண்ணம் பலருக்கு வருவது உண்டு. அவர்களுக்காக இங்கே கார அடை எப்படி செய்வது என்பது குறித்து -Ramah Jayachandran சில குறிப்புகள் தருகிறார்.
Must Read: பிஷ் அண்ட் சிப்ஸ் : மீன் பஜ்ஜி தேசிய உணவான கதை
தேவையான பொருட்கள்; ப. அரிசி 150 கி, இட்லி அரிசி - 150 கி, து.பருப்பு 150 கிராம், க.பருப்பு - 150 கிராம், பாசிபருப்பு 2 டேபிள்ஸ்பூன், முழு உளுந்து - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய் 10 அல்லது12 அவரவர் காரத்திற்கு ஏற்ப பெருங்காய தூள் 1/2 ஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம்.
செய்முறை; கறிவேப்பிலை, ப. கொத்தமல்லிதழை, தேங்காய் , துருவல் 3 டீஸ்பூன் மேலே கொடுத்த பருப்புகள், அரிசி (எல்லாம் கிராம் கணக்கு) தனி தனியே, இரண்டரை மணி ஊற வைத்து, பிறகு களைந்து, அரிசியை கிரைண்டரில் போட்டு கொஞ்சம், கொர, கொரப்பாக அரைக்க வேண்டும்.
ஊறவைத்த கடலைபருப்பை, ஒரு கைப்பிடி, எடுத்து, தனியே வைத்து கொள்ளவும் அரிசி, கொர கொரப்பராக அரைத்த பின், மிளகாய், சின்ன வெங்காயம், பருப்புக்களை மிக்ஸியில் 2, 3 சுற்று, சுற்றிவிட்டு, அரிசிமாவில் மிக்ஸ் பண்ணவும்.
பிறகு பெருங்காயபவுடர், தேவைக்கேற்ப உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பெரிய வெங்காயம் (மிகவும் பொடி, பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்) மாவில் கலந்து, ஊறவைத்த, கடலைபருப்பை, கைபிடி அளவை சேர்க்க வேண்டும், சேர்த்து, நன்கு கலக்கவும். பிறகு மாவில் சூடான நெய் ஒரு டேபிள்ஸ்பூன் (இளக்கி) நன்கு கலக்கவும்.மொறு, மொறுவென்று வர நெய் சேர்க்கப்பட வேண்டும்.
மேலும், பரங்கி பிஞ்சு (துருவிக்கணும்) சுரைக்காய் (துருவிக்கணும்). முந்திரிபருப்பு பொடியாக கட் பண்ணி நெய்யில் வறுத்து, அடைமாவில் தூவி, தோசை கல்லை, அடுப்பில் வைத்து, கல்சூடானதும், அடைமாவை வார்த்து, துருவிய தேங்காயை தூவி வெந்ததும் எடுத்தால், அடை பிரமாதமாக வரும். திருப்பிப் போடாமல், மூடி போட்டு மூடி எடுக்கும்போது நெய் கொஞ்சம் அடைமேல் போட்டு எடுத்தால், அடை பிரமாதமாக இருக்கும்.
Must Read: காய்ச்சலிலின் போது கடைபிடிக்க வேண்டிய உணவு முறை என்ன தெரியுமா?
பனீர், முருங்கைகீரை, வெந்தய கீரை எல்லாமே பொடி, பொடியாக நறுக்கி அடைவார்க்கும்போது தூவி, மூடி போட்டு மூடி, வெந்த பிறகு கொஞ்சம் நெய்விட்டு வார்த்து எடுத்தால் அடைஅருமையாக இருக்கும். வீட்டில் இப்படி தான் அடைவார்த்து அதனுடன் வெண்ணெய், நாட்டு சர்க்கரை, அவியல் இப்படி சைடு டிஷ் கூட சாப்பிடுவோம். இப்படி செய்து சாப்பிடுங்க அருமையாக இருக்கும்
#EveningSnoks #RainDayFoods #KaraAdai
Comments