உணவு எண்ணெயில் வைட்டமின் இருக்கு என்பதெல்லாம் உடான்ஸ்…


TRENDING;  மூட்டுவலிக்கு முடவாட்டுக்கால்கிழங்குஜொமாட்டோ அடாவடி,  தேன்சாப்பிடும் முறை

கன்னித் தீவு தொடர் முடிந்தாலும் முடியும்.. வேதாளம் மடிந்தாலும் மடியும்..ஆனால், உணவு எண்ணெயில் பெட்ரோலிய க்ரூட் ஆயில் கலப்படம் என்னும் புரளி ஓயவே ஒயாது போல. 

எண்ணெய் வித்துக்களைப் பிழிகையில் வெளிப்படும் எண்ணெய், சம்மந்தப்பட்ட எண்ணெய் வித்துக்களின் மணத்தைக் கொண்டிருக்கும். அதன் தடித்த தோல்களில் இருந்து வெளிப்படும் மெழுகு போன்ற பொருட்கள் கலந்திருக்கும். அதில் ஃப்ரீ ஃபேட்டி அமிலங்கள் அதிகமாக இருக்கும். இந்த எண்ணெய் க்ருட் ஆயில் என அழைக்கப்படுகிறது. அதாவது க்ரூட் வெஜிடபிள் ஆயில். க்ருட் பாமாயில், க்ரூட் சன்ஃப்ளவ்ர் ஆயில், க்ருட் கடலெண்ணெய், க்ருட் நல்லெண்ணெய்.

.ஈராயிரக் குழவிகளும், இல்லத்தரசிகளும், இந்த வாசனையை அதிகம் விரும்புவதில்லை. எனவே பல எண்ணெய்கள் சுத்திகரிக்கப்படுகின்றன. இதில் மூன்று நிலைகள் உள்ளன.  Refining, Bleaching and Deodurising என்பன அவை.முதலில், க்ருட் எண்ணெயில் உள்ள ஃப்ரீ ஃபேட்டி அமிலங்கள் காரங்களால் சமன் செய்யப்பட்டு நீக்கப்படுகின்றன. பின்னர் அதில் உள்ள மெழுகு போன்ற பொருட்கள் அகற்றப்படுகின்றன. இறுதியாக, உயர் அழுத்தத்தில், அதன் வாசனை நீங்குகிறது. 

Must Read: உணவகங்களுக்கு நெருக்கடி கொடுக்கிறதா ஜொமாட்டோ?

சுத்திகரிப்பின் இறுதியில்,  எண்ணெய், தன் நிறத்தை இழந்து, வாசனையை இழந்து பார்ப்பதற்கு நீர் போல மாறுகிறது. இது முழுக்க முழுக்க நுகர்வோர் விருப்பம் சார்ந்த மாற்றம் மட்டுமே. பருத்தி விதை எண்ணெய், க்ரூட் பாமாயில் போன்ற சில எண்ணெய்களைத் தவிர பெரும்பாலானவற்றை அப்படியே உணவு தயாரிக்கப்பயன்படுத்தலாம். ஒன்றுமே ஆகாது.

கலப்பட எண்ணையா?

அதே போல, எண்ணெயை அளவாகப் பயன்படுத்தினால், உடலுக்கு நன்மையே பயக்கும். உள்ளூரில் எளிதாக, மலிவாகக் கிடைக்கும் எண்ணெயே உடலுக்கும், பட்ஜெட்டுக்கும் நல்லது.உண்மையில் கொலஸ்ட்ரால் என்பது, அதிகமாக கார்போஹைட்ரேட் (அரிசி/கோதுமை) உண்பதால் வருவது. அதைக் குறைத்து, உனவில் புரதத்தையும், கொழுப்பையும் சரியான அளவில் சேர்த்துக் கொண்டால் பெரும் நன்மை பயக்கும்.

முன்பொரு காலத்தில் எண்ணெயில் கலப்படம் செய்வது மிக எளிதாக இருந்தது. கடலெண்ணையில், விளக்கெண்ணெய் போல. இப்போது சட்ட விதிகள் மிகக் கடினமாக்கப்பட்டுள்ளன.  கலப்படத்தைக் கண்டுபிடிப்பதும் மிக எளிதானது.எனவே, பெரும் ப்ராண்டுகளில் விற்கப்படும் உணவு எண்ணெய்களில் இது சாத்தியமில்லை.

ஆனால், இந்திய அரசே, உணவு எண்ணெய்களைக் கலக்க அனுமதி அளித்து உள்ளது. அதற்கான விதிமுறைகள் உள்ளன. அவற்றை அந்த ப்ராண்டுகள், தங்களது கேன்களில் வெளிப்படையாக அறிவித்துள்ளன.எனவே, உணவு எண்ணெயில் பெட்ரோலிய எண்ணெய்கள் கலப்படம் என்பது சாத்தியமில்லாத ஒன்று. மற்றபடி அதில் வைட்டமின் இருக்கு, அது இருக்கு என வெளியாகும் செய்திகள் பெரும்பாலும் உடான்ஸ்தான் எண்ணெயை எண்ணெய் என நினைத்து உபயோகிக்கவும். அது உடலுக்கு நல்லது, குடலுக்கு நல்லது என்னும் விளம்பரங்களை பீச்சாங்கையால் ஒதுக்கி விடவும்.

-பாலசுப்பிரமணியம் முத்துச்சாமி

#Cookingoil  #Cookingoiladultration #unhealthycookingoil 

TRENDING;  மூட்டுவலிக்கு முடவாட்டுக்கால்கிழங்கு, ஜொமாட்டோ அடாவடி,  தேன்சாப்பிடும் முறை


Comments


View More

Leave a Comments