தமிழ்நாட்டில் நடைபெறும் வேளாண் மற்றும் மரபு கலை நிகழ்வுகள்
இயற்கை வேளாண்மை, மரபுகலை பயிற்சிகள்
நடைபெற உள்ள நிகழ்வுகளின் தொகுப்பு
வாழ்வியல்பயிற்சிகள் குறித்த செய்திகள்
தமிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாடம் வேளாண்மை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அது பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து அளிப்பதே இதன் நோக்கம். இயற்கை வேளாண் சார்ந்த தகவல்களை, நிகழ்வுகளை arokyasuvainews@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். இதை வெளியிடுவதற்கு எந்த கட்டணமும் இல்லை.
இணையவழி விவசாயிகள் கருத்தரங்கு
வேளாண் துறை ,விஐடி பல்கலைக்கழகம் மற்றும் அறிவுத்தோட்டம்,வேலூர் இணைந்து நடத்தும் இணையவழி விவசாயிகள் கருத்தரங்கு - 10, தேதி; 03.09.2021 ( வெள்ளிக் கிழமை) மாலை 6.00- 8.00
சிறப்பு அழைப்பாளர் :
திரு V. அரிதாசு, நிறுவனர், ECO Care, சென்னை & ஆசிரியர் நவீன வேளாண்மை, தலைப்பு: இந்திய விவசாயப் பொருட்களுக்கு ஏற்றுமதி வாய்ப்புகள் & வழிமுறைகள்
The opportunities and the ways for export of Indian Agriculture Products
திரு. V. அரிதாசு தொலைக்காட்சி வாயிலாக மிகவும் பிரபலமானவர். பல ஆண்டுகள் ஏற்றுமதி தொடர்பான வகுப்புகள் நடத்தி வருபவர்.. அவரது உரையினால் பல இளைஞர்கள் ஏற்றுமதி செய்து முன்னேறி வருகிறார்கள். ஏற்றுமதி என்பது பிரமிப்பானது அல்ல, எளிமையானதே. மூலிகை போன்ற நமது உற்பத்திகளையும் ஏற்றுமதி செய்ய இயலும் என வலியுறுத்தி வருகிறார். இது நமக்கான , குறிப்பாக, இளைஞர்களுக்கான சிறந்த வாய்ப்பு.. தவறாமல் கருத்தரங்கில் கலந்து கொள்ளுங்கள்.
அனுமதி இலவசம். பதிவுத் தேவையில்லை. இணைப்பு ( Link) பிறகு பகிரப்படும் தவறாமல் கலந்து கொள்ளத் தயாராகுங்கள்.
வாழ்த்துக்களுடன்,
1.முனைவர் ப.அன்பரசு ,உதவிப் பேராசிரியர், வயல்.விஐடி பல்கலைக்கழகம், 9443386941
2.கு.செந்தமிழ் செல்வன், அறிவுத்தோட்டம், வேலூர், 9443032436
சிறப்பான முறையில் நடந்த 7 ஆம் ஆண்டு நெல் திருவிழா
நலம் பாரம்பரிய அறக்கட்டளை சார்பில் கடந்த 30-8-2021 சீர்காழி யில் 7 ஆம் ஆண்டு நெல் திருவிழா சிறப்பான முறையில் நடைபெற்றது.
விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் அறியவகை கருத்துக்களை வழங்கினார்கள் விழாவில் நெல்லி இயற்கை விளைபொருள் அங்காடி சார்பில் நான் விடுதலைச்செல்வன் நெய்தல்குழு தோழர்கள் தாய்திருதரன்,தயாநிதி,
சுந்தர்,அசோக்,நன்பர் இளஞ்சேரன் மற்றும் நூற்றுக் கனக்கான இயற்கை ஆர்வளர்கள் உழவர்கள் கலந்துக்கொண்டனர் விழாவை சிறப்பாக ஒருங்கினைப்பு செய்த நலம் பாரம்பரிய நன்பர்கள் குழுவிற்கு எமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் .....
#AgriEvents #OrganicTraining #NaturalLife
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
Also Read: பல்வேறு நோய்களுக்கு ஏற்ற உணவு முருங்கை கீரை
எங்களைப் பின்தொடர: முகநூல் , டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
ஆரோக்கிய சுவை இணையதளத்தின் வளர்ச்சிக்கு உங்களால் முடிந்த நிதி உதவியை அளிக்கவும். நிதி உதவி செய்ய; https://www.instamojo.com/@Arokyasuvai
Comments